26.10.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அக்டோபர் 28 தொடங்கி, டிசம்பர் 9இல் முடிவுறும். 90000 ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவர், தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு பட்டி காங்கிரஸ் தலைமையிடம் தகவல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பணவீக்க வலை மூலம் மகாராட்டிராவில் சாமானி யர்களின் தட்டில் இருந்த உணவை பாஜகவின் ‘டிரிபிள் என்ஜின் அரசு’ பறித்து விட்டது: மல்லி கார்ஜுன கார்கே காட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி ஆட்சியில் 2022-2023 மற்றும் 2023-2024 நிதியாண்டுகளில் கிராமப்புற வேலைத் திட்டத்தின் (MGNREGA) பதிவேட்டில் இருந்து எட்டு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், கடந்த அய்ந்து மாதங்களில் மட்டும், 39 லட்சத் திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், சிவில் சமூக அமைப் பான லிப்டெக் இந்தியா அதிர்ச்சிகர அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
* கடந்த 75 ஆண்டுகளில் எந்த ஒரு பெண் வழக்குரை ஞரும் அட்டார்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் பதவிகளுக்கு நியமனம் செய்யப்படவில்லை என உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஹிமா கோலி ஆதங்கம்.
* பொது தீட்சிதர்கள் 18 ஏக்கர் கோவில் நிலத்தை கபளிகரம் செய்ததாக ஹிந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
குடந்தை கருணா