சென்னை, அக். 23- ரூ.499 விலையில் ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான 15 மளிகைப்பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
மஞ்சள்தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வறுகடலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகிய பொருட்கள் இம்மளிகைத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் விவசா யப் பெருமக்களின் நல னைப் பாதுகாத்திடவும், பொது விநியோகத் திட்டப் பொருள்களைக் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்து பொதுவிநியோகத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திட கலைஞர் அவர்களால் தமிழ் நாடு நுகர்பொருள் வாணி பக் கழகம் 1972இல் தொடங்கப்பட்டு பொன் விழா ஆண்டினைக் கடந்து இந்தியாவுக்கே முன் மாதிரியாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
தரமான பொருள் நியாயமான விலை என்ற கோட்பாட்டுடன் இயக்கப் பட்டுவரும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.
சென்னை கோபாலபுரம் மற்றும் அண்ணா நகரில் இயங்கி வரும் அங்காடிகள் முதற் கட்டமாக நவீன மயமாக் கப்பட்டு துணை முதலமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு லாப நோக்கமின்றி தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களின் பேராதரவுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக வரும் விழாக் காலங்க ளைக் கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பின் விற்பனையினை லாப நோக்கமின்றி ரூ.499 விலையில் அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு என்ற பெயரில் நேற்று (22.10.2024) சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடி யில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார்.
மஞ்சள்தூள், உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு, மிளகாய், மல்லி, புளி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு, வறுகடலை மற்றும் பெருங்காயத்தூள் ஆகிய பொருட்கள் இம்மளிகைத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
இந்த மளிகைத் தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னை கோபாலபுரம், அண்ணாநகர், பெரியார் நகர் அமுதம் மக்கள் அங்காடிகளிலும், அடையார், சூளைமேடு, சிந்தா திரிப்பேட்டை, கலைஞர் கருணாநிதி நகர், நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அமுதம் நியாய விலைக் கடைகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
அமுதம் பிளஸ் மளிகைத் தொகுப்பு விற்பனைத் துவக்க விழாவில், அரசு உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர், என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.