ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், நீண்ட கால பகுத்தறிவாளர் கழகத் தினுடைய செயல் வீரரும் கொள்கையாளருமான ஆசிரியர் மானமிகு
வீ. கண்ணையன் அவர்கள் நேற்று (20.10.2024) மாலை புதுச்சேரியில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகின்றோம். வைத்தீஸ்வரன் கோவிலில் தந்தை பெரியார் சிலை அமைப்பதற்குக் காரணமானவர்களில் ஒருவரும், மயிலாடுதுறை மற்றும் சென்னை பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்து சிறப்பாக பணியாற்றிய வருமான நல்லாசிரியர் மானமிகு கண்ணையன் அவர்களின் மகள்கள் பத்மா சந்தானகிருஷ்ணன், தேன்மொழி ராமசாமி ஆகியோருக்கும், அவர்களின் மறைவால் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது சகோதரர் தலைமை கழக அமைப்பாளர் திருவாரூர் வீ. மோகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அண்மையில் புதுச்சேரி சென்றபோது அவரது உடல் நலனை விசாரித்து வந்தோம்; முதுமை காரணமாக மறைவுற்ற தோழர் அவர்களுக்கு புதுவை மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துகிறார்கள்.
கிவீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
21.10.2024