மனச்சோர்வை போக்கும் வழிமுறைகள்

Viduthalai
2 Min Read

 மனம் அமைதியாக இருக்கும் போது சிந்திப்பதற்கும், அதீதமாக உணர்ச்சிவசப் படும் போது சிந்திப்பதற்கும், நிறைய வேறுப் பாடுகள் இருக்கின்றன. ஒரு சண்டையின் போது கோபத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்றெல்லாம் கட்டுப் படுத்த முடியாமல் போகிறதல்லவா? கொஞ்ச நேரம் கழித்து இதற்காகவா இப்படியெல்லாம் நடந்து கொண்டோம் என உணர்கிறோம் அல்லவா? காரணம் உணர்ச்சி வசப்படும் போது நமது மூளை தாறுமாறாக இயங்குகிறது. தீவிர மனச்சோர்வும் அப்படித்தான். அது தீவிரமான உணர்வு நிலை. அப்போது நமது உணர்வுகள், எண்ணங்கள், செயல்பாடுகள் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. எல்லாமே எதிர்மறையாகத் தோன்றும். எதுவுமே செய் யப் பிடிக்காது. ரசிக்காது. தற்கொலை எண் ணங்கள் தோன்றும். அந்த சமயம் எத்தனை அறிவுரை சொன்னாலும், பாசிட்டிவ் எண் ணங்களை வளர்த்துக் கொள்ளச் சொன்னா லும் முடியாது. பொறுமையாக அந்த காலகட் டத்தைக் கடப்பது, மனதை அமைதிப்படுத்தத் தேவைப்பட்டால் மருந்துகள் எடுத்துக் கொள் வதே அதற்கான சிகிச்சை.

 இசை, இயற்கையை ரசித்தல், உடற் பயிற்சி செய்தல், யோகா, பாசிட்டிவ் எண்ணங்கள் இதெல்லாம் லேசான மனச்சோர்வுக்குப் பயனளிக்கும். தீவிரமான மனச்சோர்வு இருப்பவரை இதையெல்லாம் பண்ணச் சொல்வது பயனளிக்காது.

இவற்றை எல்லாம் மனச்சோர்வு வராமல் காக்கும் தடுப்பு முறைகளாகக் கொள்ளலாம். வந்தபின் செய்யும் சிகிச்சைகள் அல்ல. ஒரு வழிமுறை சொல்ல வேண்டுமானால் தினமும் நடைப்பயணம், உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். ஆனால் மாரடைப்பு வந்த ஒருவரை நடைப்பயணம் போதும் மருத்துவமனைக்குப் போக வேண்டாம் எனச் சொல்வது அபத்தமாக இருக்கும் அல்லவா? அது போலத்தான் தீவிர மனச் சோர்வும். 

தீவிர  மனச்சோர்வுதான் என எப்படி அறிவது? மேலே சொன்ன எந்த வழிமுறைகளா லும் பலனளிக்கவில்லை என்றால் அல்லது செய்ய முடியவில்லை என்றால் அது தீவிர மனச்சோர்வாக இருக்கலாம். மேலும் மன நோயில் பல வகைகள் இருக்கின்றன. மனச் சிதைவு, மனப்பிறழ்வு பைபோலார் டிஸார்டர், ஃபோபியா, மனப்பதட்டம், என பல வகைகள். பொத்தாம் பொதுவாக மன அழுத்தம், டிப்ர ஷன் எனச் சொல்வதற்கு முன் அதற்குரிய நிபுணரை அணுக வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *