சென்னை, அக்.21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புகளில் குறைபாடுகள் இருப்பதால், அவற்றை சரி செய்ய வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலா் சுப்ரியா சாஹு உத்தரவிட்டுள்ளார். இது தொடா்பாக அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா்களுக் கும் அவா் அனுப்பியுள்ள கடிதம்:
அரசு மருத்துவமனைகளில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, கழிப்பறைகள் சுகாதாரமின்றி காணப்படுகின்றன. நோயாளிகள் பயன்படுத்தும் நாற்காலிகள், சக்கர நாற்காலிகள், காத்திருப்பு மேசைகள் உடைந்தும், துருப்பிடித்த நிலையிலும் உள்ளன. நோயாளிகள் நலனுக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உரிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும், அதற்கான உரிமம் பெறப்படாததாலும், அவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீா்வு ஏற்படுத்த வேண்டும்.
முகக்கவசம் தேவை: மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளுக்கு கிருமித்தொற்று ஏற்படுவதைத் தடுக்க அவா்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும். நோயாளிக்கு வழங்கப்படும் உணவின் சுகாதாரத்தையும் தரத்தையும் மேம்படுத்த வேண்டும். சமையல் கூடங்களில் மாதந்தோறும் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். சுகாதாரமான குடிநீா் வழங்குவதுடன், தண்ணீா் தொட்டிகள் துாய்மையாகப் பராமரிக்க வேண்டும். மருத்துவமனை வளாகத் தில் கழிவுநீா் தேங்காமல் இருக்க வேண்டும். மேலும், உயிரி மருத்துவ கழிவு மேலாண்மையை செயல்படுத்துவது அவசியம். குழந்தைகள், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகி யோரை சக்கர நாற்காலிகள் அழைத்து செல்வதற்கு உதவியாளா்களை நியமிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
முறையாக பராமரிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணிக்கும், சுப்ரியா சாஹு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள், சுகாதாரம், உணவின் தரம் ஆகியவற்றை மாதம் ஒருமுறை கண்காணித்து, அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பெண் நோயாளிகளை முறையாக பராமரிக்காதது தெரியவருகிறது. அங்கு, உணவு தரம் மேம்படுத்த வேண்டும். அவா்களுக்கான வசதிகள் மற்றும் போதியளவில் ஆடைகள் வழங்க வேண்டும். மனநல காப்பாக வாசிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, ‘பன்யான்’ என்ற தனியார் அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு திட்ட மிடப்பட்டிருந்தது. அவற்றை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.