ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை மேனாள் ஊழியர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

Viduthalai
2 Min Read

கோவை, அக்.20 ஈஷா யோகா மய்யம்மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை. இரு பெண்களும் தங்கள் சுய விருப்பத்தின்பேரில் ஈஷா மய்யத்தில் தங்கி இருப்பதால் அவர்களை மீட்டுத் தர சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள் ளது. இந்த வழக்கின் பரபரப்பு அடங்கும் முன்பே.. ஈஷா யோகா மய்யம் அடுத்த சர்ச்சையில் சிக்கி உள்ளது.

ஆந்திராவின் ராஜமுந்திரியைச் சேர்ந்த ஈஷா அறக்கட்டளையின் மேனாள் தன்னார்வத் தொண்டர்கள் ஈஷா குறித்து அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டு உள்ளனர். ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக தாக்கப்படுவதாக, பயன்படுத்தப்படுவதாக, ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய் யப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய இணையர்களான சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி ஆகியோர் இது தொடர்பாக குற்றம் சாட்டி உள்ளனர். அதில், ஈஷா அறக்கட்டளையில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப் படுகின்றனர். ஈஷா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டனர். ஈஷா அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் எந்த முறையையும் பின்பற்றாமல் தன்னிச்சையாக நடத்தப்படுகிறது. ஈஷா ஹோம் ஸ்கூலில் (அய்எஸ் ஹெச்) சிறுவன் ஒருவன் மூன்று ஆண்டுகளாக எங்கள் மகனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானான். எங்களின் ஆண் குழந்தை மற்றும் எங்களின் நண்ப ரின் பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலில் மோசமான நிலைக்கு ஆளாகினர்.

இந்த பிரச்சினையை நிர்வாகத் தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது,அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே பள்ளியில் எட்டு வயது சிறுமி, உடற்கல்வி ஆசிரியர் மூலம் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானார். தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கான ஈஷா அறக்கட்டளையின் குழு உறுப்பினராக நாங்கள் செயல்பட்டு வந்தோம். அப்போதுதான் இது போன்ற கொடுமைகள் நடந்தன.

ஈஷா நிறுவனர், சத்குரு, தான் ஒரு அமைதியான பரந்த ஆத்மா என்றும், இரக்கத்தால் நிரம்பியவர் என்றும் கூறுவார். ஆனால் ஈஷா வித்யா மய்யம், ஈஷா சங்கத்ரி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து தெரிந்தும் அவர் அமைதி காக்கிறார். ஜூன் 21, 2024 அன்று 12 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன் இறந்ததும் கூட அங்கே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஈஷா பள்ளியில் வீட்டுப் பள்ளி ஆசிரியரால் எங்கள் மகள் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட எங்கள் மகள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள் நாங்கள் ஜக்கி பாபாவை கடவுளாக நம்பினோம், முழு நம்பிக்கையுடன் சேவை செய்தோம். ஆனால் அவர் கொடுமை செய்கிறார், என்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய இணையர் களான சத்ய நரேந்திர ரகானி மற்றும் யாமினி ரகானி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *