இணைய வழிக் குற்றங்கள் எச்சரிக்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்க டி.ஜி.பி.களின் மாநாட்டில் முதலமைச்சர் உரை

1 Min Read

சென்னை, அக்.20 தென் மாநில காவல்துறை இயக்குநர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங் கிணைப்பு மாநாடு சென்னை கிண்டியில் நேற்று (19.10.2024) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கருநாடகா, தெலங் கானா, அந்தமான் ஆகிய மாநில காவல்துறை இயக்குநர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, சட்டம் – ஒழுங்கு, பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்ற பல்வேறு விவகாரங்களில் தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மாநிலங்களுக்கு இடையேயான குற்ற செயல்கள், இணைய வழி குற்றங்கள் போன்ற தீவிர குற்றங்களில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை அடைய நாம் இங்கு கூடியுள்ளோம். இத்தகைய குற்றங்களை எதிர்கொள்வதில் தமிழக காவல்துறை பல் வேறு முன் னேற்றங்களை அடைந் துள்ளது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழ்நாடு காவல் துறையின் தொடர் முயற்சிகளின் பலனாக மாநிலத்தில் கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்தவர்களுக்கு சிறை தண்டனை மட்டுமின்றி, அவர்கள் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருளை ஒழிக்க மாநிலங்களுக்கு இடையே ஒன்றிணைந்த முயற்சி தேவை. உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் தொடர் ஆய்வு கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *