சென்னை, அக். 19- தொலை நிலைக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டிருப்பதாக இக்னோ பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்கு நா் கே.பன்னீா்செல்வம் வெள் ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜூலை 2024 பருவத்துக்கான மாணவா் சோ்க்கைக்கான கடைசி தேதி பல்வேறு தரப்பினரின் நலனை கருத்தில்கொண்டு அக். 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தேதி நீட்டிப்பு, சான்றிதழ் மற்றும் செமஸ்டா் அடிப்படையிலான படிப்புகளுக்கு பொருந்தாது.
கட்டணத்தில் விலக்கு: செமஸ்டா் அடிப்படையிலான மற்றும் சான்றிதழ் படிப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து வகை இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் மாணவா்கள் இணையதள இணைப்பை பயன்படுத்தி அக். 31 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
இக்னோ பல்கலைக்கழகத்தில் பிஏ, பிகாம், பிஎஸ்சி (பொது) படிப்புகளில் சேரும் தகுதி யுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரா்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவா் சோ்க்கை தொடா் பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டும் விவரங்கள் பெறலாம் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.