அய்.நா. தரும் அதிர்ச்சியூட்டும் தகவல் உலகம் முழுவதும் வறுமையின் பிடியில் 110 கோடி மக்கள்!

3 Min Read

இந்தியாவில் தீவிர வறுமையில் உழலுவோர் 23.4 கோடிப் பேர்!

நியூயார்க், அக். 18 – உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள், மிக மோசமான வறுமை யில் தள்ளப்பட்டுள்ளனர் என அய்.நா. வளர்ச்சித் திட்டம் தெரி வித்துள்ளது. மேலும் வறுமையால் பாதிக்கப்பட்ட வர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் கவலை தெரிவித்துள்ளது.

2 ஆம் உலகப் போருக்குப் பிறகு 2023 இல் அதிகரித்த போர்கள்
ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (OPHI) அமைப்புடன் இணைந்து, இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள அய்.நா. வளர்ச்சித் திட்டமானது, “இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 2023 ஆம் ஆண்டு தான் அதிக போர்கள் உருவாகி யுள்ளன,” எனவும்; “இந்தப் போர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வறுமையின் அளவு மூன்று மடங்கு அதிகமாகி இருக்கிறது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. பல பரிமாண வறுமை என்பது வறுமையின் அளவீடு ஆகும். இது மனிதனின் நல்வாழ்விற்குத் தேவையான வீடு, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, சுத்தமான குடிநீர், மின்சாரம், வேலையின் தரம் உள்ளிட்டவற்றை உள்ள டக்கி கணக்கிடப்படுகிறது.

112 நாடுகளில் 110 கோடி பேர் பல பரிமாண வறுமை
ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (OPHI) அமைப்பும், அய்.நா.வும் கடந்த 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் 630 கோடி மக்களைக் கொண்ட 112 நாடுகளில் இருந்து தரவுகளை சேகரித்து தங்கள் பல பரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு வரு கின்றன. அதில் தான், தற்போதைய ஆய்வின் படி 2024 ஆண்டு 110 கோடி மக்கள், பல பரிமாண வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. “இந்த 110 கோடி மக்களில் 45.5 கோடி மக்கள் போர் ஏற்பட்டுள்ள நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்” என அய்.நா. வளர்ச்சி அமைப்பின் தலைமைப் புள்ளியியல் நிபுணர் யான்சுன் ஜாங் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைத் தேவைக்கு போராடும் இளைஞர்கள் – குழந்தைகள்
“போர்களால் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளில் உள்ள ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டம் மிகவும் கடுமையான போராட்ட மாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 58.4 கோடி மக்கள் தீவிர வறுமையை அனு பவித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதில் 27.9 சத விகிதம் பேர் குழந்தைகள். சஹாரா, ஆப்பிரிக்கா, தெற்காசிய நாடுகளில் தான் அதிக அள வில் மக்கள் பலபரிணாம வறு மையில் பாதிக்கப்பட்டுள் ளனர். அதாவது 83.2 சதவிகிதம் மக்கள் இந்நாடுகளில் வறுமையில் உள்ளனர். இந்த வறுமையை குறைக்கும் நட வடிக்கையில் அய்.நா. உள்ளிட்ட அமைப்புக்கள் ஈடுபடுவதற்கு, தற்போது நடை பெற்று வரும் போர் மிகப்பெரிய தடையாக இருப்பதாக ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி அமைப்பின் சபீனா அல்கிரே குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தீவிர வறுமையில் உழலுவோர் 23.4 கோடிப் பேர்! இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி மக்களில் 23.4 கோடி மக்கள் தீவிர வறுமை யில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, உலகள வில் உள்ள 110 கோடி ஏழை மக்களில் ஏறக்குறைய 50 சதவிகித ஏழைகள், இந்த அய்ந்து நாடுகளில் மட்டும் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *