பாட்னா, ஆக.1 “2024 நாடாளு மன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் மோடி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார்; தோதான இடத்தைக் கண்டு பிடிக்கத்தான் இப்போதே அவர் எல்லா நாடுகளுக்கும் சென்று வருகிறார்” என ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் கூறியுள்ளார்.
“எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி ஊழல், குடும்ப நலன் மற்றும் சந்தர்ப்பவாத அரசி யல்வாதிகளால் ஆனது. இது, ‘இந்தியா’ கூட்டணி அல்ல இந்தி யாவில் இருந்து வெளியேற வேண்டிய ‘குவிட் இந்தியா’ (னிuவீt மிஸீபீவீணீ) கூட்டணி” என்று பிரதமர் மோடி விமர்சித்திருந் தார். பீகார் துணை முதலமைச்சரும், தனது மகனுமான தே ஜஸ்வி-யுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் லாலு பிரசாத் கலந்து கொண்டபோது, அவரிடம் மோடியின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, “பிரதமர் மோடிதான் இந்தியாவில் இருந்து வெளியேற திட்டமிட்டுக் கொண் டிருக் கிறார்.
அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு பிரதமர் மோடி வெளி நாட்டிற்குச் சென்று விடுவார். எந்த நாட்டிற்குச் செல்லலாம் என்பதே மோடிக்கு இப் போது இருக்கும் கவலை யாகும். அதற்காகத்தான் அவர் நிறைய நாடுகளைச் சுற்றிவருகிறார். எந்த நாட்டில், தான் நிம்மதியாக பீட்சா, மோமோஸ், கவு மெய்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம் எனத் தேர்வு செய்வதற்காகவே உலகம் சுற்றுகிறார்” என்று லாலு பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், “எதிர்க்கட்சிகளைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட் டத்தில் பீகார் முதலமைச்சரான நிதிஷ் குமாருடன் கலந்து கொள்ள இருக் கிறேன். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை அப்படியே வைத் திருக்க வேண்டும். அதன்மூலம் பாஜக-வைத் தோற்கடிக்கவேண் டும். இதுவே எங்கள் கூட்டணி யின் நோக்கமாகும். அடுத்து வரும் மக்களவைத் தேர்த லில் பாஜக-வை வீழ்த்த அனைத்து நடவடிக்கை களையும் எடுப்போம்” என்று தெரி வித்த லாலு பிர சாத், மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்திற்கு ஒன்றிய அரசே முழுமையான காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.