சென்னை,ஆக.1- கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் எதையும் செய்யாமல், தங்கள் தோல்வியை மறைப்பதற்கு மக்களை பா.ஜ.க. திசை திருப்புகிறது என்று நாடாளு மன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சி, 5ஆவது மண்டலம், துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.88கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா 30.7.2023 அன்று நடைபெற்றது.
இதில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
முதல் நிகழ்ச்சியாக சத்திய வாணி முத்து நகரில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகி யோர் தொடங்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து அங்கப்ப நாயக்கன் தெருவில் பள்ளி கட்ட டம் புதுப்பிக்கும் பணி, வெங்கட்டா தெருவில் அங்கன்வாடி மய்யத்தில் மேல்தளம் அமைக்கும் பணி, அம்மன் கோயில் தெருவில் பள்ளி கட்டடம் புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மனிதாபிமானம் இல்லாத கட்சி என்றால் அது பா.ஜ.க.தான். மோடி, அமித்ஷா இருவரும் மனி தாபிமானம் இல்லாதவர்கள். 3 மாதம் முடிந்த பின்பும் மணிப்பூரில் நடக்கின்ற கலவரத்திற்கு பா.ஜ.க. முதலமைச்சர் ஒரு கருத்தும் கூற வில்லை.
இந்தியாவில் பெண்களை “கட வுளாக” நினைக்கும் நேரத்தில், அங்கு இனக் கலவரத்தில் 2 பெண் களை அசிங்கப்படுத்தி அவர்களை நிர்வாணமாக்கியதற்கு எந்த நட வடிக்கையும் இல்லை. பெண்களை நிர்வாணப்படுத்திய காட்சிப் பதிவு வைரலாகியதால் நாடாளு மன்றத்தைத் தொடங்குவதற்கு அச்சப்படுகிறார்கள்.
இந்தியாவில் கடந்த 9 ஆண்டில் பா.ஜ.க. எதுவும் சாதிக்கவில்லை. பெட்ரோல், தக்காளி விலை அதி கரித்துள்ளது. காஸ் விலை ரூ.1,600 ஆக அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு காரணமான பா.ஜ.க. அரசு, தங்கள் தோல்வியை மறைப் பதற்கு மக்களை திசை திருப்பு கிறார்கள்.
இன்று, எதிர்க்கட்சிகள் இணைந்து பெ ரிய கூட்டணி உருவாகி இருக்கிறது. அடுத்த பிரத மரை தீர்மானிக்கும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாகி இருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை யில் பா.ஜ.க. அரசு உள்ளது.
9 ஆண்டு காலத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக் கிறது? மதுரையில் எய்ம்ஸ் மருத் துவக் கல்லூரி கட்டுகிறோம் என்று சொன்னார்கள், இதுவரை கட்டப்படவில்லை.
இதுவரை தமிழ்நாட்டிற்கு செய்ததையும், இனி செய்யப் போவதையும் பட்டியலிடுங்கள்.
-இவ்வாறு அவர் கூறினார்.