சேலம், அக்.15- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தின் அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு 17.9.2024 காலை 10:30 மணியளவில்கா.நா.பாலு தலைமைக்கழக அமைப்பாளர் ஆத்தூர் மாவட்ட தலைமைக் கழக அமைப்பாளர் அ.சுரேசு, மேட்டூர் மாவட்ட ப.க. தலைவர் எடப்பாடி கோவி.அன்புமதி, சேலம் மாவட்ட ப.க.செயலாளர் வழக்குரைஞர் சுரேசு, சேலம் மாநகர ப.க.செயலாளர் வழக்குரைஞர்
கோ. கல்பனா, மோ.தங்கராசு சேலம் மாவட்ட கலைத்துறை அமைப்பாளர், பேங்க் ராஜூ பொதுக்குழு உறுப்பினர், மு.கவுதமன் ப.க.,இரா.புகழேந்தி ப.க., டாக்டர்.சலீம் ப.க. மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் இரண்டாம் பரிசு பெற்ற கல்லூரி மாணவி ப.காயத்ரி, இவர்கள் அனைவருடன் சேலம் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் வீரமணி இராசு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி உறுதிமொழி எடுத்து விழாவை இனிப்பு வழங்கி நிறைவு செய்தனர்.