ஆளுநரும், ஆரியர் – திராவிடரும்

2 Min Read

அரசியல்

‘தினமணி’ நாளேட்டின் 31.7.2023 இதழில் ஒரு செய்தி.

“பிரிவினையைப் பிரதிபலிக்கும் திராவிடம்: 

ஆளுநர் ரவி

திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

ஏகாத்ம மாணவவாத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு அமைப்பு சார்பாக பாரதிய ஜன சங்க கட்சித் தலைவர்களில் முதன்மையானவரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான தீனதயாள் உபாத்யாயா நூல் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது.

இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு நூல் தொகுப்பை வெளியிட்டு பேசியதாவது: 

பாரதம் வலுவாக இருக்க வேண்டும். அதற்கு தீனதயாள் உபாத்யாயா தத்துவம் இருக்க வேண்டும்.

1956-இல் சென்னைப் பட்டினம் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. பல்வேறு மொழிகள் பேசுபவர்களும் வசித் தனர். ஆனாலும் மொழிப் பாகுபாடின்றி நடுநிலை யோடுதான் வாழ்ந்தனர். 1956, நவம்பரில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரம் என மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. முன்பு எல்லாம் திராவிடம் மற்றும் ஆரியம் பற்றி இந்த அளவுக்கு பேச்சு இல்லை. தற்போது திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையை பிரதி பலிக்கிறது என்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி: தீனதயாள் உபாத்யாயா அரசியலில் பன்முகத் தன்மை யுடன் கூடிய ஆளுமையாக இருந்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு உயர்ந்தவர். அவர், சமூகம் பற்றி மட்டுமன்றி தனி மனிதன், நாடு பற்றியும் பேசினார். மக்களின் உரிமைகளையும் கடமைகளையும் எடுத்துக் கூறினார் என்றார் அவர்.”

(‘தினமணி’ – 31.7.2023)

தமிழ்நாட்டின் ஆளுநர் திரு. ஆர்.என். இரவிக்கு எப்பொழுது பார்த்தாலும் திரா விடத்தைப் பற்றிய நினைப்புதான்.

மொழிவாரி மாநிலத்திற்கு முன்பு திராவிடம் என்பதெல்லாம் கிடையாதாம். இவருக்கு யார்தான் இப்படி எழுதிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை!

மனுதர்மத்திலேயே “திராவிடம்” குறிப்பிடப் படுகிறதே!

“பௌண்டரம், ஔண்டரம் திராவிடம், காம் போசம், யவனம், சகம், பால்ஹீகம், சீகம், கிராதம், தாதம், கசம் இத்தேசங்களை யாண்டவர்களனை வரும் மேற்சொன்னபடி சூத்திரனாய் விட்டார்கள்” (மனுதர்மம், அத்தியாயம் பத்து – சுலோகம் 44)

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ஆளுநர் “பெருமான்?” 

பூணூல் அணிவதும் அந்த ஆரிய பிராமணத் தன்மையே!

வெகு தூரம் போக வேண்டாம்.

இந்தியாவின் தேசிய கீதத்தில் இடம் பெறும் திராவிடத்தை என்ன செய்ய உத்தேசம்? ‘தினமணி’யில் வெளிவந்த செய்தியின்படி அந் நிகழ்ச்சியில் யார் யார் எல்லாம் கலந்து கொண் டார்கள்? யாருடைய நூல் வெளியிடப்பட்டுள்ளது என்பதைக் கவனித்தால் ஆரியம் என்றால்   என்ன என்பது விளங்காமற் போகாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *