கொஞ்சக் காலம்தான் ஆண் டார்கள். மாநிலத்தை – சங்கி மயமாக்கி விட்டார்கள். கருநாடக மாநிலம் மங்களுரு உடுப்பி, பட்கல் உள்ளிட்ட வடமேற்கு கடற்கரை மாவட்டங்கள் பாஜக ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் முழுமையான சங்கி மயமாகிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை மதவெறி புற்றுநோய்போல் பரவிவிட்டது.
அருகில் உள்ள கோவா மாநி லத்தில் வலுவாக பரவி இருக்கும் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ அமைப்பு. இது மறைமுக ஆர் எஸ் எஸ் கிளை அமைப்பு.
இதன் பணியே ஹிந்து கலாச் சாரத்தை பரப்புவது, அக்கலாச் சாரத்தை பின்பற்றாதவர்களை தண் டிப்பது, அதனை ஏற்காதவர்களை கொலை செய்வதுதாம். இவர்களால் நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றோர் கொல்லப்பட்டனர்.
கருநாடகாவில் கடந்த பாஜக ஆட்சியின் போது இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி செல்லத்தடை, முஸ்லீம் மாணவர்கள் மதரீதியாக உணர்வுத்தாக்குதலுக்கு ஆளானார்கள். தற்போது அங்கு சித்தராமையா தலைமையில் காங் கிரஸ் ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது.
இருப்பினும் ஹிந்துத்துவ சில்லறை அமைப்புகளில் சட்ட விரோத நடவடிக்கை தொடர் கதையாக உள்ளது. நவராத்திரி விழா நடைபெறும் 9 நாட்கள் இஸ்லா மியர்கள் ஹிந்து கோவில்கள் உள்ள தெருக்களில் தற்காலிக தடை நடத்தக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பல கோவில் களின் வெளிப்பக்தியில் கோவி லுக்கு வருபவர்கள் பூ மற்றும் பொட்டு இல்லாமல் வரக் கூடாது என்று பதாகை வைத்துள்ளனர். ஆனால், கோவில் நிர்வாகம் எங்களுக்கும் இந்தப் பதாகை களுக்கும் தொடர்பில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
ஹம்பி மாவட்டத்தில் உள்ள ஹொஸ்பேட் என்ற ஊரில் உள்ள அம்மன் கோவிலின் வாசலில் எஸ்.எஸ்.கே.இ. (ஸநாதன் சன்ஸ்தா கருநாடகா) சார்பில் வைக்கப் பட்டுள்ள பதாகை ஒன்றில் Es.Es.Ke. Samaja Se annous devasthana, hosapele. Devasthanada olage Puspam kunkuma illade pravesavilla.
எங்கள் அமைப்பின் அதிகாரத்தின் கீழ் வரும் இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் நெற்றி யில் பொட்டு இல்லாமலும் பூ இல் லாமலும் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று அச்சுறுத்தும் வகையில் அறிவிப்பு வைத்து ஒரு கிண்ணத்தில் குங்குமம் வைத் துள்ளனர்.
இவர்கள்தான் சொல்கிறார்கள்.
கைம்பெண்கள் பொட்டு மற்றும் பூ வைக்கக் கூடாது என்று அப்படி என்றால் இந்துவாக உள்ள கணவனை இழந்த பெண்கள் கோவிலுக்கு வரக் கூடாது என்கிறார்களா? அதே போல் குங்குமத்தில் உள்ள நிறமிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
குறிப்பாக சில நெகட்டிவ் வகை குருதிப் பிரிவு உள்ளவர்களுக்கு சந்தனம் குங்குமம் விபூதி மற்றும் இதர செயற்கை பூச்சுக்கள் ஒவ்வா மையை ஏற்படுத்தும் – அதே போல் பூக்களும் சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் – இதுபோன்று ஒவ்வாமை காரணமாக குங்குமம் மற்றும் பூ வைக்காத இந்துப் பெண்களும் கோவில்களுக்கு வரக்கூடாது என்கிறார்களா?
5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து ஹிந்துத்துவ அமைப் புகள் இந்த அளவிற்கு தென் மாநிலங்களில் ஒன்றான கருநாடகாவில் மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைத் துள்ளது.
இந்த நிலையில் மத்தியப் பிரதேசம், குஜராத், உள்ளிட்ட மாநிலங்களில் 25 ஆண்டுகளாக இவர்கள் ஆட்சியில் உள்ளனர். ஒன்றியத்திலும் 10 ஆண்டுகளைத் தாண்டி ஆட்சியில் உள்ளனர்.
கல்வி அறிவு குறைவாக உள்ள வட மாநிலங்களில் இவர்கள் எந்த அளவு மதவெறியை ஊட்டி இருப்பார்கள். இதனால்தான் அங்கு மதவெறியால் இஸ்லாமிய மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர்.