தற்போது குறிப்பாக இந்தியாவில் நடக்கும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்பது கருத்துத் திணிப்புகள் ஆகும்.
இங்கு உண்மையான கருத்துக் கணிப்புகள் என்றால் அது ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு பிறகான கருத்துக்கணிப்பு தான் கிட்டத்தட்ட துல்லியமானவையாக இருக்கும் – அதுவரை இது அதிகாரவர்க்கம் நடத்தும் ஒரு திணிப்புதான்.
மேலை நாடுகளுள் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளில் மக்களிடையே மூன்றுமுறை வாக்கெடுப்பு நடத்தி, மூன்றையும் ஒப்பிட்டு – வேட்பாளர்களை அதிகம் தேர்ந்தெடுக்கும் மக்கள் மற்றும் அவர்களின் மன ஓட்டம், அன்றைய அரசியல் சூழல், ஏற்கெனவே இருந்த அரசால் ஏற்பட்ட பாதிப்புகள், அல்லது நன்மைகள், திட்டங்கள், வெளியுறவுக் கொள்கை மற்றும் ஆட்சியாளர்களுக்கு தொழில் வளர்ச்சியின் மீதுள்ள ஆர்வம் மற்றும் அக்கறை போன்றவையாகும். இம்முறை அமெரிக்கா வித்தியாசமான இரண்டு அதிபர் வேட்பாளர்களை காண்கிறது.
ஒன்று புகலிடம் கோரி வருபவர்களை விரட்டுவோம் என்ற டோனால்ட் டிரம்ப் மற்றொன்று அமெரிக்கா அனைவருக்குமானது என்று கூறி தேர்தலைச் சந்திக்கும் கமலா ஹாரீஸ்.
அமெரிக்கா என்ற நாடே குடியேறிகளால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான், உள்நாட்டுப் போர்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்களது வாழ்விடத்தை இழந்துகொண்டு வந்த அமெரிக்க பூர்வ குடிகள். தற்போதைய டெக்ஸாஸில் மட்டுமே அடர்த்தியாக வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
தற்போது அதுவும் பறிபோகவே குறிப்பாக அய்க்கிய அமெரிக்க நாடுகளில் அங்குள்ள பூர்வீக குடிகள் கிட்டத்தட்ட அகதிகளைப் போன்றுதான் வாழ்கின்றனர்.
டோனால்ட் டிரம்ப் முதல் கமலா ஹாரீஸ் வரை அங்கு சென்று குடியேறியவர்கள் தான். ஆகவே கருத்துக்கணிப்புகள் மிகவும் கவனமாக எடுக்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளோடு ஒத்துவராவிட்டால் மேலை நாட்டு ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும்
ஆனால் இங்கே கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்புகள்தான் அரங்கேற்றப்படுகிறது என்பது ஊரறிந்த உண்மை.