எடாவா, அக்.11 உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கூட்டணி தொடரும் என்று கட்சியின் தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 6 தொகுதிகளின் சமாஜ்வாடி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவின் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்துவதற்காக கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் எடாவா வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், ‘‘இந்தியா கூட்டணி இருக்கும் என்பதை மட்டுமே நான் கூற விரும்புகிறேன். சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடரும். இது அரசியல் குறித்து விவாதிப்பதற்கான நேரமில்லை” என்றார்.