கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
2.8.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* இதுவரை எவரும் கேட்டறியா ஊர் நூஹ் மாவட் டத்தில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க திரைப்படங்களில் வருவது போல், காவல்துறை இறுதியாக வந்தது. வெறுப்பை உமிழும் கொடூரர்களை தடுங்கள் என்கிறது தலையங்க செய்தி.
* பீகார் அரசு மேற்கொண்ட ஜாதிவாரியான கணக் கெடுப்பு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் விலக்கியது.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு மற்றும் அரசமைப்பு எந்திரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் மணிப்பூர் மாநில காவல்துறை தலைமை இயக்குநரை ஆக.7இல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
* மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் விவாதம் நடத்தப்படும் என மக்களவைத் தலைவர் நேற்று (1.8.2023) அறிவித்தார். விவாதத்துக்கு வரும் 10ஆம் தேதி பிரதமர் மோடி பதில் அளித்து பேச உள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 21ஆம் நூற்றாண்டு இந்தியாவில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது, மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கடந்த அய்ந்து ஆண்டுகளில் குஜராத்தில் 81 காவல்துறை காவலில் 81 மரணங்கள் நிகழ்ந்துள்ளன, இது இந்தியாவிலேயே அதிகம் என ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தி இந்து:
* 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியத்தில் ஒன்றிய அரசு ரூ.6,366 கோடி பாக்கி வைத்துள்ளது.
* தகவல் பாதுகாப்பு மசோதா மீதான குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
– குடந்தை கருணா