புதுடில்லி, அக்.9- மக்கள் தொகை கணக்கெடுப்பை பிரதமா் நரேந்திர மோடி தாம திப்பது ஏன் என கேள்வி எழுப்பிய காங்கிரஸ், ‘ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முழுமையான மற்றும் அா்த்தமுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை நிலைநாட்ட முடியும்’ என்று குறிப் பிட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் 7.10.2024 அன்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடும் பொருளாதார நெருக் கடியில் சிக்கியுள்ள இலங்கைகூட, புதிய மக்கள்தொகை கணக் கெடுப்பை அறிவித்து, 7.10.2024 அன்று முதல் முதல் தொடங்கி யிருக்கிறது. அங்கு கடைசியாக கடந்த 2012-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் இந்தியா வின் நிலை என்ன? கடந்த 2021ஆம் ஆண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளே தொடா்ந்து பயன்படுத்தப் படுவதால், 10 கோடிக்கும் அதிக மான இந்தியா்களுக்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 அல்லது ஏழைகளுக்கான பிரத மரின் விலையில்லா உணவு தானிய விநியோகத் திட்ட பலன்கள் மறுக்கப்படுகின்றன.
மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை குறித்து கடந்த 1951ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 10 ஆண்டுளுக்கும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதுபோல, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி ) உள்ளிட்ட பிற ஜாதிப் பிரிவினரின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பும் தேவைப்படுகிறது.
ஏனெனில், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் மட்டுமே கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முழுமையான மற்றும் அா்த்தமுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை நிலை நாட்ட முடியும்.
இந்தச் சூழலில் ஜாதி வாரியான மக்கள்தொகை கணக் கெடுப்பை நடத்த பிரதமா் மோடி தாமதிப்பது ஏன்? என்று குறிப்பிட்டுள்ளார்.