புதுடில்லி, அக்.8- மருத்துவ படிப்புக்கான இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு வழக்கில் ஏற்ெகனவே 2 குற்றப்பத்திரிகைகளை சி.பி.அய். தாக்கல் செய்திருந்தது. மூன்றாம் கட்ட குற்றப்பத்திரிகையை கடந்த வாரம் சிபி.அய். தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள ஓயாசிஸ் பள்ளியில் இருந்து தேர்வுத்தாள், பங்கஜ் குமார் என்பவரால் வினாத்தாள் திருடப்பட்டது.
பள்ளி முதல்வர் அசானுல் ஹக், மற்றும் துணை முதல்வர் முகமது இம்தியாஸ் ஆலம் ஆகியோரின் அனுமதியுடன்தான் அவர் தேர்வுத்தாளை திருடி சென்றுள்ளார்.
அசானுல் ஹக், ஹசாரிபாக் பகுதியின் தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஆவார். எனவே ஷாம்செட்பூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் அரங்கில் வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைய ஹக் மற்றும் ஆலம் ஆகியோர் அனுமதிக் கப்பட்டனர்.
உள்ளே நுழைந்ததும் அவர்கள் வினாத்தாள் இருந்த பெட்டியை உடைத்து ஒரு வினாத்தாளை எடுத்து உள்ளனர். பின்னர் அதை புகைப் படங்கள் எடுத்தனர். அதன்பிறகு டிரங்கிற்கு மீண்டும் சீல் வைத்தனர். பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வந்தபிறகு தனது கூட்டாளியான சுரேந்திர குமார் சர்மாவிடம் அவர்கள் வினாத்தாள்களின் புகைப்படங்களை ஒப்படைத்தார். 9 மருத்துவ மாணவர்கள் அந்த வினாத்தாள்க ளுக்கு விடைகளை கண்டுபிடித்து குறித்தனர்.
பின்னர் விடைகள் குறிக்கப்பட்ட வினாத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு மின்னணு முறையில் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டது. அதை பெற்றவர்கள், தங்களிடம் பெரும் தொகை கொடுத்தவர்களுக்கு வினாத்தாள்களை விற்றனர். முன்கூட்டியே பணம் செலுத்திய 144 மாணவர்கள் வினாத் தாள்- விடைகளை வாங்கி தேர்வு எழுதி உள்ளனர். தேர்வர்கள் தேர்வெ ழுதிவிட்டு வெளியேறியவுடன் விடை குறிக்கப்பட்ட வினாத்தாள்கள் கடத்தல் கும்பலால் எரிக்கப்பட்டது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.