சுரண்டை, அக். 6- தென்காசி மாவட் டம் சுரண்டையில் 26.09.2024 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் தேவ. நர்மதா சிறப்பு ரையாற்றினர்.
தந்தை பெரியார் அவர்கள் இறந்து அம்பது ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கு இன எதிரிகளை கதறவிடுகிறார் என்றால் தத்துவத்தின் தலைவர் தந்தை பெரியார் -அவரின் தத்துவ பெயர்தான் திராவிடம். தந்தை பெரியாரை பேசிட துணிச்சல் வேண்டும். தந்தை பெரியாரை பேசினால் வீரம் வரும் என்று பல கருத்துகளை எடுத்துரைத்தார்.
சுரண்டை திமுக நகரச் செயலாளர், கணேசன், திமுக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டே.அன்பழகன், மற்றும் திமுக தோழர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்ந்த பாக்கியராஜ், தென்காசி மாவட்டத் தலைவர் த. வீரன், மாவட்டச் செயலாளர் கை. சண்முகம், பகுத்தறிவாளர் கழகம் மா. அறுமுகம், ஆலங்குளம் நகரச் செயலாளர், பெரியார் குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.