வல்லம், அக். 6- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தென் இந்தியாவில் அய்க்கிய நீர் அமைப்பின் அங்க மாக இணையும் முதல் கல்வி நிறுவனமாக, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இன்று ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அய்ந்து பேராசிரியர்கள் கொண்ட அய்க்கிய நீர் அமைப்பு மாணவர் அத்தியாயம் நிர்வாக இயக்குநர் முனைவர் கலாநிதி வைரவமூர்த்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேரா முனைவர் வெ.இராமச்சந்திரன் மற்றும் பல் கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.சிறீவித்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது அண்மையில் நியூயார்க்கில் நடந்த பசுமைப் பள்ளி மாநாட்டில் பன்னாட்டுப் பசுமைப் பல்கலைக்கழக விருதை வென்றது வெற்றிகளுக்கு இன்னொரு முக்கிய மைல்கல்லாகும்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கலாநிதி வைரவமூர்த்தி, தண்ணீர் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதில் பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று பாராட்டினார். உலகளாவிய தண்ணீர் சிக்கல்களை ஆராய்ச்சி, புதுமை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் தீர்ப்பது அய்.டபிள்யூ.ஏ..பிரதான நோக்கமாகும். தண்ணீர் பாதுகாப்பில் பல் கலைக்கழகம் உறுதியான முயற்சியை எடுத்துவருகின்றது என்று வெகுவாக பாராட்டினார்.
140 நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட உலகளாவிய நீர் சிக்கல்களை தீர்ப்பதில் ஆய்வு மற்றும் கருத்தரங்குகள் மூலம் பல்வேறு திட்டங்களில் செயல்படுகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.இராமச்சந்திரன் அவர்கள் முன்னோடி முயற்சிகளை பெருமையாகக் கூறி தென் இந்தியாவில் இணைந்த முதல் கல்வி நிறுவனமாக இருப்பது எங்களுக்குப் பெருமை அளிக்கிறது. இந்த இணைப்பு எங்கள் மாணவர்களுக்கு பன்னாட்டு தண்ணீர் திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்புகளை வழங்கும் என குறிப்பிட்டார்.
நீர், மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பன்னாட்டு முயற்சிகளில் செயற்பட்டுப் பங்கேற்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உலகளாவிய சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க புதிய வாய்ப்புகளை வழங்கும் இந்த புதிய முயற்சி பல்கலைக்கழகத்திற்கு பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும்.