சிந்துவெளி திராவிட நாகரீகத்தில் எருமைக்கும் எருதுவுக்கும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது தெரியுமா? காரணம், சிந்துவெளி மக்கள் பக்குவப்பட்ட நாகரீகத்தை அடைவதற்கு முன்பு உணவு உற்பத்தியாளர் களாக மாறினர். பின்னர் அவர்களின் தேவைகளுக்குப் போக மீதமுள்ளவற்றை விற்பனைக்கு கொண்டு சென்ற அடையாளங்கள் உள்ளன. அக்காலட்டத்தில் உணவு உற்பத்திக்குத் தேவையான வயல் வேலைகளுக்கு எருதும் எருமையும் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி இருந்தது,
பசு அவர்களுக்கு கிட்டத்தட்ட அவசியமில்லாத ஒன்றாகத்தான் இருந்துள்ளது. காரணம் பால் பொருட்கள் எருமையிடமிருந்து கிடைக்கப்பெற்றது. எருமையைப் பராமரிக்க அதிகம் சிரமப்படத் தேவையில்லை. ஆண், பெண் இரண்டு எருமைகளையுமே விவசாய பணிகளுக்கு பயன்படுத்தியதால் அவர்களுக்கு பசுவை கோமாதாவாகக் கொண்டாட வேண்டிய தேவை இருக்கவில்லை.
ஆனால், ஆரியர்கள் அப்படி அல்ல – அவர்கள் ஆடுமாடுகளை மேய்த்துகொண்டு அதைமட்டுமே முக்கிய வாழ்வாதாரமாக கருதி நாடோடிகளாக திரிந்தனர். பால் தரும் பசுக்கள் அவர்களுக்கு முக்கிய வாழ்வாதாரம். ஆகையால் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
அன்று கன்றையும் பசுவையும் அறுத்து அவித்துத் தின்றவர்கள், சமண பவுத்தம் தழைத்த பிறகு யாகத்தில் மிருகங்கள் கொல்லப்படுவதை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாக யாகம் என்ற பெயரில் மிருகப்பலியை விரும்பாமல் சமண பவுத்தம் நோக்கிச் சென்றனர். இதனால் 7ஆம் நூற்றாண்டுக்கும் 11ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தாங்கள் புலால் உணவை தவிர்த்து பசுவைக் கோமாதாவாக்கி விட்டனர்.