நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவருமான என். கவுதமனின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். *திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மய்யம் சிறந்த பெரியாரியல் நூலுக்கான பெரியார் விருதை மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் எழுதிய ‘விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?’ புத்தகத்திற்கு வழங்கியதையொட்டி தமிழர் தலைவரைச் சந்தித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (நாகை, 1.10.2024)