குடியேற்றம், அக். 3- தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவு புத்தகத் திறனாய்வு அரங்கம் தொடக்க விழா மற்றும் பாராட்டு விழா 22.09.2024 அன்று மாலை 5 மணியளவில் குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார் அரங்கில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன் பாபு தலைமையேற்றார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் பி. தனபால் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கழக காப்பாளர் ச.ஈஸ்வரி, நகர கழக அமைப்பாளர் வி.மோகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சி.லதா, பகுத்தறிவாளர் கழகம் க.பரமசிவம், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் பொ. தயாளன், அமைப்பாளர் மு. சீனிவாசன, வேலூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் இரா.ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி தொடக்க உரையாற்றினார்.
பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் இர.அன் பரசன் ஆற்றிய நோக்க உரை யில் பகுத்தறிவு புத்தகத் திற னாய்வு அரங்கம் தொடங்க காரணம் இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். முற்போக்கு சிந்தனை உள்ள புத்தகங்களையும் அதன் எழுத்தாளர்களையும் இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களையும் கவிஞர்களை யும் பெருமளவில் ஒருங்கிணைத்து மாதந்தோறும் இந்நிகழ்வை தொடர்ந்து நடத்திட திட்டமிட்டு உள்ளோம்.
மேலும் ‘தங்கலான்’ திரைப் படத்தில் சிறப்பாக வசனம் எழுதிய எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களையும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தெருவிளக்கு இரா. கோபிநாத் அவர்களையும் பாராட்டி பேசினார். வழக்குரைஞர் சு. சம்பத்குமார், வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி. சடகோ பன், நகர கழக தலைவர் சி. சாந்த குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா. அழகிரிதாசன் அறிமுக உரை யாற்றினார். இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜி.என். பாபு, கவிஞர் சகுவரதன், கவிஞர் மா.சீ.பாண்டியன், எழுத் தாளர் இ. தமிழ்தரணி, கவிஞர் திராவிட பாண்டியன், கவிஞர் இரா. திருமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு பகுத்தறிவு புத்தகத் திற னாய்வு குறித்து பேசினார்கள்.
‘தங்கலான்’ திரைப்பட வசனம் எழுதிய அழகிய பெரியவன் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தெருவிளக்கு இரா.கோபிநாத் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் ஆற்றிய சிறப்புரையில், தந்தை பெரியாரின் பிறந்த நாள் முன்னிட்டு இன்று நடைபெறும் புத்தகத் திருவிழா தொடக்க விழா இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையானது. பார்ப்பனர்கள் கட்டி எழுப்பிய மூடநம்பிக்கைகளை தகர்க்க பகுத்தறிவாளர்கள் படைத்த கூர்மையான எழுத்துகள் தேவைப்படுவதால் இதுபோன்ற புத்தக ஆய்வரங்கம் தேவைப்படுகிறது என்று கூறினார்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் ஆற்றிய விழா பேருரையில் அவர் பேசியதாவது, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் முன்னெடுத்துள்ள இந்த புத்தக திறனாய்வு அரங்கம் பாராட்டுக்குரியது. மாதந்தோறும் நடக்கும் இந்த திறனாய்வு கூட்டத்தில் தந்தை பெரியார் எழுதிய பகுத்தறிவுப் புத்தகங்களை திறனாய்வு செய்வதன் மூலம் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரங்களை இளைய தலைமுறையிடம் வெகுவாக கொண்டு செல்லலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இளைஞர்கள் மற்றும் மாணவர்களை இந்நிகழ்விற்கு வரவழைத்து பல்வேறு புத்தகங்களில் உள்ள சமூகத்தை மாற்றக்கூடிய அறிவியல் கருத்துகளை அவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே புகுத்தப்படும் தவறான மற்றும் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளை இந்த புத்தகத் திறனாய்வு மூலம் முறியடிக்க முடியும் என்று தனது சிறப்புரையில் குறிப்பிட்டு பேசினார்.
மேலும் இன்றைய நிகழ்வில் தங்கலான் திரைப்படத்தில் சிறப்பாக வசனம் எழுதிய எழுத்தாளர் அழகிய பெரியவன் மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தெருவிளக்கு இரா.கோபிநாத் ஆகியோர் பாராட்டி விருது வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்வில் வேலூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் எழுத்தாளர்கள், கவிஞர்கள்,
கழக முன்னோடிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் க.சையத் அலீம் நிகழ்ச் சியை ஒருங்கிணைத்தார். முடிவில் குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம் நன்றி உரையாற்றினார்.