பஞ்சாபின் கபுர்தலா ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களால் உருவாக்கப் பட்ட பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் சொசைட்டி என்ற அமைப்பின் சார்பில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஹோசியார்பூர் மாவட்டக் கல்வி அதிகாரி ஜயவந்த் ராய் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஜயவந்த ராய் பேசும்போது ‘‘பெரி யாரின் சிந்தனைகள் தற்போது வட இந்தியாவிலும் அதிகம் பரவிவருவது மிகவும் பெருமைக் குரியதாகும், மேலும் மக்களிடையே தந்தை பெரியாரின் கொள் கைகளைக் கொண்டு சேர்க்க இது போன்ற விழாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது போன்ற விழாக்கள் அதிகம் நடத்தி மக்களிடையே தந்தை பெரியாரைக் கொண்டு செல்லவேண்டும்’’ என்று தனது உரையில் கூறிப்பிட்டார். ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் பல்வேறு முக்கிய அதிகாரிகள் மற்றும் சமூக நீதி அமைப்பைச்சேர்ந்தவர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
பஞ்சாபில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
Leave a Comment