தேனூர், செப்.30- பொன்னமராவதி ஒன்றியம் தேனூர் கிராமத்தில் திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, அறிஞர் அண்ணா அவர்க ளின் 115 ஆவது பிறந்தநாள் விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் 16.9.2024 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி தலைமையேற்று உரையாற்றினார். இளைஞரணித் தோழர் தேனூர் விநாயகமூர்த்தி வரவேற்புரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்ட கழகக் காப்பாளர் ஆ. சுப்பையா, மாவட்டத் தலைவர்
மு. அறிவொளி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ. சரவணன், மாவட்டச் செயலாளர்
ப. வீரப்பன், ஒன்றியத் தலைவர் சித.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
நிகழ்வின் தொடக்கத்தில் சோம. நீலகண்டன் ‘‘மந்தி ரமா? தந்திரமா?’’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை நிகழ்த்தி காட்டினார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் தேன்மொழி கழகப் பாடல்களை பாடினார். பெரியார் பிஞ்சு ரா.ச செம்மொழிஅறிஞர் அண்ணா தந்தை பெரி யார் ஆகியோர் ஆற்றிய பணிகள் குறித்துப் பேசினார்.
தி.மு.க சார்பில் மாவட்டக்கலை இலக்கியப் பகுத்த றிவு பேரவையின் மாவட்டத்துணை அமைப்பாளர் தேனூர் சுப. சின்னையா உரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா. செந்தூரப் பாண்டியன், கழக கொடியினை ஏற்றி வைத்து, தொடக்க உரையாற்றினார்.
கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன், பார்ப்பனீய ஆதிக்கம், பகுத்தறிவுச் சிந்தனைகள், பெண்ணுரிமை, சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் குறித்து கிராமப்புற மக்கள் விழிப்புணர்வு பெறக்கூடிய வகையில் எளிய முறையில் சிறப்புரையாற்றினார். நிறைவாக இளைஞரணித் தோழர் தேனூர்
ப. நாகார்ஜுன் நன்றி கூறினார்.
நிகழ்வில் தேனூர் ஊராட்சி மன்றத் தலைவரும் பொன்னமராவதி வட்டார காங்கிரஸ் தலைவருமான வி.கிரிதரன், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஆலவயல் முரளி சுப்பையா, கிளைச் செயலாளர் காஜாமைதீன், ஊராட்சி செயலாளர் பத்மநாபன், மெய்யர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அ. சுரேஷ், துணைச் செயலாளர் சேதுராமன், கொன்னையூர் சிவசங்கர், செல்வநாயகம் பிள்ளை, பொன்னமராவதி ஒன்றிய துணைத் தலைவர் க. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தி.பொன்மதி, திருமயம் ஒன்றியத் தலைவர் அ.தமிழரசன், ஒன்றியச் செயலாளர் க.மாரியப்பன், ஒன்றியத் துணைத் தலைவர் குழிபிறை சிவா, மகளிர் அணி தோழியர்கள் வீர.வசந்தா, சி.ராசி ஞானசுந்தரி, தேனூர் தெரஸ், மாணவர் கழக இ.கார்த்திக், பெரியார் பிஞ்சுகள் ரா. ச.புரட்சியாளன், ரா.ச.பெரியார் சமரன், ம.தமிழினியன் ம.மகிழன் உள்ளிட்ட தோழர்களும், தேனூர் கிராமத்தில் உள்ள ஏராளமான பெண்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.