ஆவின் டிலைட் 500 மி.லி. பால் பாக்கெட் விலை உயர்த்தப்படவில்லை மேலாண்மை இயக்குநர் விளக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,நவ.17- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட் டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவின் பால் விலை உயர்வு என்னும் தலைப்பில் தொலைக் காட்சிகளில் 200 மி.லி பாக்கெட் விலை உயர்த் தப்பட்டுள்ளதாகவும், ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பால்  வயலட் (Violet) நிற பாக்கெட் டுகளில் விற்பனை செய்யப்பட வுள்ளதாகவும் செய்தி வெளி யாகியுள்ளது. 

இது குறித்து கீழ்கண்ட தெளிவுரை வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியா ளர்கள் ஒன்றியத்தால் (ஆவின்) தினசரி 41,000 லிட்டர் பால் உற்பத்தி செய் யப்பட்டு, தினசரி 33,700 லிட் டர் பால் பாக்கெட்டுகளாக பொது மக்கள் பயன் பெறும் வகையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு விற்பனை செய் யப்பட்டு வருகிறது.

பொது மக்கள் விருப்பத் திற்கேற்ப அவ்வப்போது புதிய பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி ஆவின் மூலம் பசும் பால் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வகை பசும் பால் 200 மி.லி. டிலைட் எனும் பெயரில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதே சமயத்தில் ஆவின் டிலைட் 500 மி.லி. பாக்கெட்டுகள் தொடர்ந்து பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்தவித மாற்றமும் செய்யப் படவில்லை. தொடர்ந்து ஆவின் டிலைட் பால் விற்பனை அதிகரித் துள்ளதே தவிர குறைய வில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சமன் படுத்திய பால் (ஜி.வி), நிறை கொழுப்பு பால் (திசிவி) மற்றும் ஆவின் டிலைட் 500 மிலி பாக்கெட்டுகள் அதே விலையில் விற்பனை செய்யப் படுகிறது. இதில் எவ்வித மாற் றமும் செய்யப்படவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *