* பகுத்தறிவாளர் கழக தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ஆசிரியர் பாவலர் பொன்னரசு அவர்களின் வாழ்விணையர், திராவிடர் கழக இளைஞர் அணி தோழர்கள் இரா. கபிலன், இரா. பேகன் ஆகியோரின் தாயார் சுயமரியாதை சுடரொளி ஆசிரியர் பா.மலர்கொடி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (01-10-2024) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 5,000 நன்கொடையாக நீங்கா நினைவுகளுடன் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.
* ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன் – மாலதி இணையரின் பெயரனும், குறளரசி – தினேஷ்குமார் மகனுமான தி.கு.நவிலன் முதலாம் ஆண்டு பிறந்தநாளை (27.9.2024) முன்னிட்டு, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கினார்கள்.