சென்னை, செப்.28 இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான விக்ரம் மின்உற்பத்தி நிறுவனம் நெல்லை மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட்டில் 146 ஏக்கரில் ரூ.1,260 கோடி முதலீட்டில் சோலார் பேனல் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய அரசிடம் விக்ரம் சோலார் நிறுவனம் விண்ணப்பித்தாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் அடுத்த 10 ஆண்டுகளில், சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை எளிதாக அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கங்கைகொண்டான் சிப்காட் தொழில் மைய வளாகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா சார்பில் டாடா டிபி சோலார் லிமிடெட் என்ற பெயரில் 313 ஏக்கர் நிலப்பரப்பில் சோலார் பேனல் மற்றும் மாட்யூல் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.