தமிழ்நாடு அரசு சமூக சீர்திருத்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க தனித்துறையை அமைக்க வேண்டும்: சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன்

2 Min Read

சென்னை, செப்.28- சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் வழக்கொழிந்து வரும் மூடநம்பிக்கை, பழக்க வழக்கங்களை புத்துயிரூட்டி வளர்க்கவும், பழைமைவாதக் கருத்துகளை பரப்புரை செய் வதும் அண்மைக்காலமாக அதி கரித்து வருகிறது. ஜாதி, மதம் சம்பந்தமான கற்பிதங்களுக்கு அறிவியல் முலாம்பூசி நூறாண் டுகள் வளர்த்து, பாதுகாத்து வரும் பகுத்தறிவு சிந்தனையை சீர்குலைக்கும் பேரபாயமாகி வருகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் தன்னம்பிக்கையூட்டும் சொற் பொழிவு என்ற பெயரில் ஸநாதனக் கருத்துகளை பரப்புரை செய்வது தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. இதில் அரசு சார்ந்த கல்வி நிலை யங்களும் விதிவிலக்கில்லை என்பது வேதனையளிக்கிறது.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தகவல் தொடர்புதுறை வியக்கத்தக்க வகையில் முன்னேறியுள்ளது. அச்சு ஊடகங்கள் இன்று மின்னணு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என பல பரிமாணங்களில் வளர்ந்து குழந்தைகள் தொடங்கி, முதியோர் வரை பயன்படுத்தும் சாதனமாகியுள்ளது. இதில் திரைப்படத்துறையில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை பரப்புரை செய்து, “யாதும் ஊரே! யாவரும் கேளீர்!!” என்ற தொன்ம மரபுகளை வளர்த்ததில் சமதர்ம, சுயமரியாதை, திராவிட, கம்யூனிஸ்ட் இயக் கங்கள் குறிப்பிடத்தக்க பங் காற்றியிருப்பதனால், இதன் வழியாக நல்லிணக்கம், சகோதரத்துவம் என சமூகம் பண்பட்டுள்ளது.

அதிகார மய்யத்தில் செல் வாக்கு செலுத்தும் பன்னாட்டு குழும நிறுவனங்களும், நிதி மூலதன சக்திகளும், ஒன்றிய அரசில் அதிகாரத்தில் அமர்ந் துள்ள வகுப்புவாத வலதுசாரி சக்திகளின் துணையோடு சமூகப் பிளவை நிரந்தமாக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

திரைப்படங்கள், நாடகங்கள், சின்னத்திரை தொடர்கள் என எல்லா ஊடகங்களும் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. ஆன்மீகவாதி என்ற பெயரில் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி ஆலயங்களிலும், வழிபாட்டு மய்யங்களிலும் மக்களை திரட்டி தவறாக வழிநடத்துகின்றனர். இந்த சூழ்நிலையில் சமூக விழிப் புணர்வு இயக்கத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுப்பது காலத் தின் தேவை என்பதை இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது.

கடந்த காலத்தில் கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ‘சமூக சீர்திருத்தத்துறை’ சீர மைக்கப்பட்டு பரந்துபட்ட முறையில் இயங்கச் செய்ய வேண்டும். சமூக சீர்திருத்த, அறிவியல் கருத்துக்களை விரிவாக மேற்கொள்ள ஒரு சிறப்புத் திட்டத்தை வகுத்து செயல்படுத்திட தனித்துறையை உருவாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும் குறிப்பாக முதலமைச்சர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது. – இவ்வாறு இரா.முத்தர சன் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *