அக்காலம் கற்காலம் அடுத்து வந்த நற்காலம்,
ஆரியத்தின் மாயைவென்ற அய்யாவின் பொற்காலம்,
இக்காலம் பகுத்தறிவு பரிதிஒளி பரவியதால் பகற்காலம்,
ஈ.வெ.ரா. பெரியாரின் இனமான சிந்தனைகள்
உண்மை எது என்றுரைத்த உள்ளத் தெளிவதனால்
ஊமைகளாய் இருந்த மக்கள் உணர்ந்திட்டார் விடுதலையை
எத்தனையோ தடைகள் வென்றார் வெண்தாடி வேந்தர் என்று
ஏளனங்கள் செய்தவர்க்கு எரிமலையாய் அவர் தெரிந்தார்.
ஐயமில்லை அச்சமில்லை அவரின் கொள்கை எற்பவர்க்கு
ஒருவர் உண்டோ அவர்க்கிணையாய் சொல்வதற்கு உலகினிலே?
ஓடவைத்தார் மூடமதி ஒதுக்கிவைத்தார் மடைமைகளை
நாத்திகத்தின் நாயகராய் நாடு போற்றும் நமது அய்யா
ஔடதமாய் அருமருந்தாய் அவர் இருந்தார் மக்களுக்கு.
வாழ்வளித்த அய்யாவால் வளர்ந்திருக்கும் பகுத்தறிவு
பகுத்தறிவை ஏற்றிடுவோம், பண்புகளைப் போற்றிடுவோம்.
– மு.கல்யாணசுந்தரம்,
துணை வட்டாட்சியர் (ஓய்வு), திருமருகல்.