சுயமரியாதை இயக்க நடவடிக்கைகள் பற்றி ஆங்கிலேய அரசின் ரகசிய குறிப்புகள்

viduthalai
1 Min Read

(G.T.H, Bracken I.C.S. ( சென்னை அரசாங்க தலைமைச் செயலர்) இந்திய அரசு உள்துறை செயலாளர் திரு. M.G. Hallett I.C.S. க்கு அனுப்பிய Demi Official Note Fort St. George dt. 18th Dec. 1934, No. P. 4-24 Pub General.

ஜாதி ஒழிப்பே முதன்மையாகவும் மதம் மற்றும் தனியார் சொத்துக்களை ஒழிப்பதை இரண்டாவதாகவும் கொண்டுள்ள சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் காங்கிரசில் சேரலாமா என்பதைப் பற்றி ஆராய ஒரு கூட்டம் கூட்டினார்கள். ஆனால் எந்த முடிவுக்கும் வரவில்லை. இவ்வியக்கம் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தேர்தலில் தனது தீவிரமான ஆதரவை அளித்தது. அவ்வியக்கப் பேச்சாளர்கள் பிராமணரை பலமாகத் தாக்கிப் பேசியதால் அதிக ஓட்டுக்களை இழந்தனர். தங்கள் வசமுள்ள தமிழ்ப் பத்திரிகைகளில் இந்து, முஸ்லிம், கிருத்துவ மதங்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி எழுதுவதன் மூலம் சில மாதங்களாக அவ்வியக்கம் தன்னை விளம்பரப்படுத்தி வருகிறது.

– Fortnightly Reports 1934, First Half of Dec.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *