திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் பெரியார் பிறந்தநாளில் (17.09.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், “பாசறை முரசு” இதழின் ஆசிரியர் பாசறை மு.பாலனுக்கு “பெரியார் விருது” அளித்து சிறப்பிக்கப்பட்டிருந்தது. அதற்காக தான் பெற்ற நினைவுப்பரிசை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். விருதுடன் அன்னாருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது (23.09.2024, சென்னை).