சென்னை, செப்.25- வெளிநாடு பயணம் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கைதான். தமிழ்நாடு அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பேசப்பட்டு வருகிறது.
செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது:
செய்தியாளர்: ரொம்ப நாட்களாகவே அமைச்சரவை மாற்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங் கப்படுவதாக செய்திகள் வருகிறது. நீங்களும், சொன்னதைத்தான் செய்வோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு உங்கள் பதில்?
பதில்: ஏமாற்றம் இருக்காது… மாற்றம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சன், கலாநிதி விராசாமி, கிரிராஜன், துணை மேயர் மகேஷ்குமார், மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் அய்சிஎப் முரளி, நாக ராஜன் உள்பட பலர் இருந்தனர்.