இடைப்பாடி, செப். 23- 29.08.2024 அன்று காலை 10.00 மணியளவில் கல்வியறிவு, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவையே மக்களை உயர்த்தும் என்று மக்கள் நலன் போற்றிய பகுத்தறிவு பகலவன் வைக்கம்வீரர் தந்தை பெரியார் அவர் களின் 146 வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் மேட்டூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகமும் – எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி இனிதே நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக முன் னைக்கும் முன்னை முகழ்த்தி நறுங்கனியாம் செப்பரிய பெருமை கொண்ட அன்னைத் தமிழுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து நிகழ்விற்கு பிறகு வந்திருந்த அனைவரையும் வரவேற்று தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் முனைவர் மு. ஜெயசித்ரா வரவேற்புரை நிகழ்த் தினார்.
இவ்விழாவிற்கு தலைமை ஏற்றிருக்கும் இடைப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் மு. குணசேகரன் தலைமையுரையில் தந்தை பெரியாரின் பெருமைகளையும், மனித சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றியும் எடுத்துக்கூறி சிறப்பானதொரு தலைமையுரை நிகழ்த்தினார்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு என்று வள்ளுவர் பெருந்தகை சொன்னதை செயல்படுத்த அரும்பாடுபட்டு வரும், திருக்குறளை உலகறிய செய்து வரும் .
மனித அறிவுக்கு ஏற்றது மக்களுக்கு நன்மை பயப்பது. மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப் பற்றி நாளும் பேசிட வேண்டும் என்று முழங்கிய தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் பேச்சுப் போட்டிக்கான தொடக்கவுரையை மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இடைப்பாடி கோவி .
அன்புமதி தொடக்கவுரையை நிகழ்த்தினார். பேச்சுப் போட்டிக்கான மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டு நெறி முறைகளை மேட்டூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் பு.வீரமணி உரையாற்றினார் அதனைத் தொடர்ந்து பேச்சுப் போட்டி தொடங்கியது.
பேச்சுப் போட்டியில் இடைப்பாடி சுற்றியுள்ள கல்லூரிகள் பத்மாவணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கருப்பூர் சக்தி கைலாஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நங்கவள்ளி. இடைப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இடைப்பாடி ஏ.வி.எஸ் கல்வியியல் கல்லூரி சேலம். 106.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேலம் – 7, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேட்டூர் ஆகிய கல்லூரிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் 37. இதில் பெண்கள் 27, ஆண்கள் 10 பேர் கலந்து கொண்டனர்.
முதல் இடம்: சி. ஹரிஹரன் எம்.ஏ. முதலாம் ஆண்டு தமிழ். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடைப்பாடி.
இரண்டாம் இடம்: ர.மேனகா பிஎஸ்சி, சி.எஸ்., இரண்டம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடைப்பாடி.
மூன்றாம் இடம்: கே.கோகுலப்பிரியா பிஎஸ்சி, சி.எஸ்., இரண்டாம் ஆண்டு பத்மாவனி கலை மற்றும் அறிவியல் மகளிர்
கல்லூரி ஓமலூர்
முன்னிலை வகித்தோர்: கா..நா.பாலு தலைமை கழக அமைப்பாளர், பெ.சவுந்தராசன் பொதுக் குழு உறுப்பினர், சி.மெய்ஞான அருள் நகர நகர செயலாளர், கமலம் பொதுக் குழு உறுப்பினர், சுரேஷ் குமார் சேலம் மாவட்ட செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்,
போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு வீரமணி ராஜி தலைவர் மாவட்ட பகுதாறிவாளர் கழகம், சி. மதியழகன் மாவட்ட செயலாளர் பகுத்தறிவாளர் கழகம் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
கலந்து கொண்ட மாணவ மாணவிகள்
பெரியாரால் வாழ்கிறோம்: 8 பேர், என்றும் தேவை பெரியார் : 7 பேர், புரட்சியாளர் பெரியார் : 3 பேர், பெரியார் பிறவாமல் இருந்தால்: 4 பேர், பெரியார் காண விரும்பிய சமுதாயம்: 3 பேர், சுய சிந்தனையாளர் பெரியார் : 5 பேர், மண்டைச் சுரப்பை உலகு தொழும் : 3 பேர், பெரியார் ஆச்சரியக்குறியா! கேள்விக்குறியா? : 3 பேர், சிறப்பானதொரு தலைப்பில் பேசி அசத்தினார்கள்.
நடுவர்களாக கு.சண்முகபிரியா உதவி பேராசிரியர் கைலாஷ் மகளிர் கல்லூரி நங்கவள்ளி, இரா . சங்கீதா தமிழ் உதவி பேராசிரியர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடைப்பாடி, வீரமணிராஜி தலைவர் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மூன்று பேர் நடுவர்களாக இருந்து முதல் மூன்று இடங்களை துல்லியமாக கணித்து அறிவித்தார்கள். மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத் தொகை சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
தி.மு.க. மாவட்ட பிரிதிநிதி த. செந்தில்குமார்.
முதல் பரிசு ரூ. 2500, இரண்டாம் பரிசு ரூ. 1500, மூன்றாம் பரிசு ரூ. 1000, சிறப்பு பரிசு ரூ. 500, என மொத்த பரிசுத் தொகையையும் வழங்கினார் என்பது பெருமைக் குரியதாகும்.
நகர பகுத்தறிவாளர் கழகம் எடப்பாடி க.மாதேஸ்வரன் நன்றியுரையாற்றினார்.