மகாராட்டிரா மாநிலத்தின் பகுத்தறிவாளர் மறைந்த நரேந்திர தபோல்கரின் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் களப்பணியாளர் ரூபாலி ஆர்டே, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்து, அவ்வமைப்பின் சார்பாக மராத்தி மொழியில் வெளிவரும் ”அந்திரஷேத்ர நிர்மூலன் சமிதி” (மூடநம்பிக்கை ஒழிப்பு) மாத இதழை வழங்கினார். அவ்விதழின் ஆசிரியர் ராகுல் தோரட், பேராசிரியர் அசோக் கதம் ஆகியோர் ஆசிரியரிடம், நரேந்திர தபோல்கரின் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். உடன் திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், துணைப்பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மும்பை பகுத்தறிவாளர் கழக தலைவர் இரவிச்சந்திரன் உள்ளனர். (பெரியார் திடல், 20.9.2024)
மும்பை பகுத்தறிவாளர்கள் – தமிழர் தலைவருடன் சந்திப்பு

Leave a Comment