தந்தை பெரியார் பிறந்த நாளைப் போற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

1 Min Read

‘சிந்திப்பவன் மனிதன்
சிந்திக்க மறுப்பவன் மதவாதி
சிந்திக்காதவன் மிருகம்
சிந்திக்க பயப்படுகிறவன் கோழை’
அவருடைய தொண்டினை வியந்து பாவேந்தர் பாரதிதாசன்…
‘தொண்டு செய்து பழுத்த பழம்;
தூய தாடி மார்பில் விழும்;
மண்டைச் சுரப்பை உலகு தொழும்;
மனக் குகையில் சிறுத்தை எழும்;
அவர் தாம் பெரியார்…’ என்று பாடினார்.
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக, பெண்களின் உரிமைகளுக்காக, கருத்துச் சுதந்திரத்திற்காக சிந்திக்கும் மனிதர்களுக்காக போராடிய அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம்!.. அவர்காட்டிய சமூகநீதிப் பாதையில் பயணமாற்றுவோம்!…
செப்டம்பர்-17 தந்தை பெரியார் பிறந்தநாள்… “சமூகநீதி நாள் உறுதிமொழி..” எடுத்துக் கொள்வோம்!…
வா.அண்ணாமலை, அய்பெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: [email protected].

அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.
அ.எழிலரசன், மாநிலத்தலைவர்.
ஆ.இராஜசேகர் மாநிலப் பொருளாளர்.
கு.ரமாராணி, மாநில மகளிர் அணி செயலாளர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *