சென்னை,செப்.17- உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகள், திருநம்பியர்கள் கல்விக் கட்டணங்களின்றி கல்வி பயில விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
உயர்கல்வியை தொடர விரும்பும் திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி செலவுகளை அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு அரசின் சமூல நலத் துறை சார்பில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து திருநங்கைகள் மற்றும் திருநம்பியர்களும் வருமான உச்சவரம்பு ஏதுமின்றி, இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதை சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர்கல்வி படிப்புகள் பயில விரும்பும் திருநங்கைகள், திருநம்பி யர்கள், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.
மாந்திரிகமாம் – மாந்திரிகம்!
மாந்திரீகம் செய்ததாக சந்தேகம்;
சத்தீஸ்கரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை!
ராய்ப்பூர்,செப்.17- சத்தீஸ்கரில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுக்மா மாவட்டத்தில் மாந்திரீகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு இணை யர்கள் உள்பட ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்து கொல்லப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.
சத்தீஸ்கரில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் தான் சுக்மா. இங்கு மந்திரீகம் செய்வதை எல்லாம் இந்தக் காலத்திலும் மக்கள் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக இட்கல் கிராமத்தில், கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு குழந்தை அல்லது ஒரு ஆண் இறந்து கொண்டிருந்தனர்.
மாந்திரீகம்
இவர்கள் இறப்புக்கு, இரண்டு இணையர்கள் உள்பட ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தான் காரணம் என அப்பகுதி மக்கள் சந்தேகப்பட்டுள்ளனர். இவர்கள் பொருளாதார ரீதியாக வளர்ந்து வருபவர்களை மாந்திரீகம் செய்து கொன்றுவிடுகின்றனர் என அப்பகுதி மக்கள் பேசிக் கொண்டுள்ளனர்.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட குடும்பத்தின் கதையை முடித்து விட, கிராம மக்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதையடுத்து, கண்ணா (வயது 34), அவரது மனைவி பிரி – புச்சா (வயது 34), அவரது மனைவி அர்ஜோ (வயது 32) மற்றும் மற்றொரு பெண் லச்சி (வயது 43) ஆகிய 5 பேரை கட்டையால் தாக்கி கொலை செய்தனர்.
கைது
இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இது தொடர்பாக ராஜேஷ், ஹித்மா, சத்யம், முகேஷ், பொடியம் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். இந்தக் காலத்திலும் மாந்திரீகம் செய்ததாக கூறி கொலை செய்யப்படும் நிகழ்வு நடந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
சமூக வலைதளங்களில் பல பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஆர்.எஸ்.எஸ். ஆசாமி மற்றும் அவரது மனைவி
மீது வழக்குப் பதிவு!
லால்பூர்(உபி), செப்.17- உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் சிங். இவர் அப்பகுதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய பிரமுகராக உள்ளார்.
இவர் போலி சமூக வலைதளக்கணக்குத் துவங்கி பெண்கள் தொடர்பான பல்வேறு ஆபாசமான கருத் துக்களை வெளியிட்டு வந்துள்ளார். குறிப்பாக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியில் உள்ள பெண்களை மிகவும் மோசமாக சித்தரித்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று எழுதி வந்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகரான ரோஷினி ஜெய்ஸ்வால் என்பவர் குறித்து மோசமான எழுதி இருந்தார். இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
பிறகு அவர் கணினி மென்பொருள் நிபுணர்களை அணுகி குறிப்பிட்ட வலைதளத்தை யார் இயக்கு கிறார்கள் என்று ஆய்வு செய்த போது அது அப்பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஸ் என்று தெரியவந்தது.
இதனை அடுத்து ரோஷினி ஜெஸ்வாலும்
ஆர்.எஸ்.எஸ். ஆசாமியின் சமூக வலைதளப் பதிவால் பாதிக்கப்பட்ட பெண்களும் சேர்ந்து அவரது வீட்டிற்குச் சென்று அவரை அடித்து உதைத்து விசாரித்தனர்.
அப்போது அவரும் அவரது மனைவியும் சேர்ந்து எதிர்க்கட்சி பெண் உறுப்பினர்களை மோசமாகச் சித்தரித்து எழுதுவது போன்ற இழிசெயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு இருவரையும் பிடித்துச்சென்று லால்பூர் பாண்டேபுர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.