திருச்சி தில்லை நகரில் அமிர்தம் பதிப்பகம் சார்பில் கவிஞர் செந்தலை நெப்போலியன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ‘கலைஞர் என்றொரு காவியம்’ நூல் வெளியீட்டு விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, திராவிடர் கழக வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியனுக்கு “சமூகசேவைக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது” வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், விருதாளர்கள் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.