கோவை, செப்.12 கோவை கொடிசி யாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனை வோர்களுடன் ஆலோசனை நடத்தி னார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அப்போது சிறீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், ‘‘இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது.
இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்லை. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா, நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு… கடை நடத்த முடியல மேடம்… ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்” என்றார் அவர்.