சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த அகில இந்திய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக், அவரது வாழ்விணையர் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து அன்போடு வரவேற்றார். தமிழர்களின் முறைப்படி விருந்தினர்களை வரவேற்பது முதல் பணி என்று கூறி, பயனாடை அணிவித்தார்.
அவரது வாழ்விணையர், நீண்ட நாள்களாக பெரியார் திடலுக்கு வருகை தரவேண்டும் என்ற தனது நினைப்பு நிறைவேறியதாகக் கூறினார். பெரியார் புத்தகத்தினை தமிழர் தலைவர் நினைவுப் பரிசாக கையொப்பமிட்டு அவருக்கு வழங்கினார். கூடுதலாக பெரியார் புத்தக நிலையத்திற்குச் சென்று பெரியார் கொள்கை குறித்த பல புத்தகங்களை வாங்கிச் சென்றனர். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், ‘பெரியார் அருங்காட்சியகத்தில் உள்ள ஒளிப்படங்கள், நினைவுப் பரிசுகள் குறித்து விளக்கமாக அவர்களுக்கு எடுத்துக் கூறினார் (சென்னை, 10.9.2024).