சென்னை, செப். 9- ஜி.பி.எஸ். சிக்னலை காட்டிலும் துல் லியமாக வழிகாட்ட உதவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் அலைபேசிகளில் ‘நாவிக்’ என்ற சிக் னல் வழிகாட்டியை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தேசிய தொலையுணர்வு மய்ய இயக்குநர் பிரகாஷ் சவுகான் கூறியுள்ளார்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ‘தொலைத் தொடர்பு தொழில் நுட்பம்’ என்பது மிக வும் முக்கியம். விண்வெளி திட்டங்களை செயல்படுத்து வது என்பது நம்மிடம் பலம் இருக்கிறது என்பதை காட் டுவதற்காக அல்ல, வளத்தை மேம்படுத்துவதற்காகவே ஆகும். வருகிற 2040ஆம் ஆண் டுக்குள் உலக பொருளாதாரத்துக்கு குறைந்த பட்சம் 10 சதவீதம் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வரு கிறது. அதற்கு ஏற்ப அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் மிகவும் முக்கிய மானவையாகும்.
ஓரிடத்தில் இருந்து மற் றொரு இடத்துக்கு செல்வதற்கு அலைபேசி மூலம் ஜி.பி. எஸ்., ‘கூகுள்மேப்’ போன்ற வற்றை பயன்படுத்தி வருகிறோம். இதற்கு செயற்கை கோள்களின் பங்கு அளப்பறியது. ஜி.பி.எஸ். கருவியை போலவே, இந்தியா சொந்தமாக 7 செயற்கைக்கோளுடன் இணைந்த ‘நாவிக்’ என்கிற வழிகாட்டியை உருவாக்கி யுள்ளது.
இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் அனைத்து அலைபேசிகளிலும் இந்த நாவிக் சிக்னலை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ். சிக்னலை காட்டி லும் நாவிக் சிக்னல் மிக துல்லியமாகவும் இருக்கும் என் பது கூடுதல் சிறப்பாகும். ஏன் நிலவை தொடர்ந்து நாம் ஆராய்ச்சி செய்கிறோம் என்று பலரும் கேட்கின்றனர். இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 140 கோடி இந்தநூற் றாண்டு நிறைவடைவதற்குள் மக்கள் தொகை இன்னும் பல மடங்கு மேலும் உயரும். அப் போது நமக்கு இந்த ஒரு பூமி போதாது.
அதைவிட கூடுதலாக 1.5 பூமி தேவைப்படும். அதற் கேற்ப நிலவும் 3.84 லட்சம் கி.மீ தொலைவில் தான் அமைந்துள்ளது. இது அதிக தூரமில்லை. ஒரு சக்தி வாய்ந்த ராக்கெட், 3 முதல் 5 நாட்களுக்குள் நம்மை நில வுக்கு கொண்டு சேர்த்து விடும்.
நிலவில் மனித இனத்துக்கு பயன்படும் வகையில் ஏராள மான வளங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ச்சி செய்யவே சந்திரயான் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் மூலம் பல்வேறு தகவல் கள் பெறப்பட்டுள்ளன.
சந்திரயான்-1 வெற்றிக்கு பிறகு, சந்திரயான்-2 திட்டம் தோல்வி அடைந்தது. ஆனால், அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். தோல் விகள் தான் அதிகளவில் நமக்கு கற்றுக்கொடுக்கும். அதிலிருந்து மீண்டுவர வேண் டும். தோல்விகளை பற்றி கவலைப்படக்கூடாது என்று இஸ்ரோ தேசிய தொலையுணர்வு மய்ய இயக்குநர் பிர காஷ் சவுகான் கூறினார்.