இம்பால், செப்.8 மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று (7.9.2024) காலை ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்த கொலை நிகழ்வு நடைபெற்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
மாவட்ட தலைமையகத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தனியாக வசித்து வந்த நபரின் வீட்டிற்குள் பயங்கரவாத ஆயுதக்குழு நுழைந்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வில் மலை சார்ந்த பயங்கரவாதிகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூர் மேனாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் மோதல் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.