மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 27% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தனது தலைமையிலான ஒன்றிய அரசு முடிவெடுத்திருப்பதாக அன்றைய பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அறிவித்த நாள் இன்று (1990, ஆகஸ்ட் 7).
அறிவிப்பை வெளியிட்டு அவர் ஆற்றிய உரையில், பாரத ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் ராம்.மனோகர் லோகியா ஆகியோரின் கனவு நிறைவேற்றியிருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.