நீலகிரி மாவட்டம், உதகை, தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில், 02.09.2024 அன்று நடைபெற்ற நிகழ்வில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் முன்னிலையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 100 விவசாயிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் தேயிலை அறுவடை இயந்திரங்களும், 14 விவசாயிகளுக்கு ரூ.15.87 இலட்சம் மதிப்பில் விசை இழுவை இயந்திரம் மற்றும் களை எடுக்கும் கருவிகளை வழங்கினார். உடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் செல்வி அபூர்வா, வேளாண் விற்பனை – வேளாண் வணிகத்துறை ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் கோ.பிரகாஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், வேளாண்மைத்துறை இயக்குநர் பா.முருகேஷ், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உட்பட பலர் உள்ளனர்.