லக்னோ, ஆக.31- பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநில அரசு, அரசின் திட்டங்கள், சாதனைகள் பற்றிய தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதற் காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச டிஜிட்டல் கொள்கை, 2024 என்ற பெயரில் அறி விக்கப்பட்டுள்ள அந்த திட்டத்தில், “மாநில அரசின் திட்டங்கள், சாதனைகளின் அடிப்படையில் உள்ளடக்கம், காணொலிகள், டுவீட்கள், இடுகைகள், ரீல்ஸ்களை டிஜிட்டல் ஊடகங்களில் காட்டுவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். பட்டியலிட்ட ஒவ்வொரு டுவிட்டர் எக்ஸ், முகநூல், இன்ஸ்டாகிராம், மற்றும் யுடியூப் ஆகியவை சந்தா தாரர்கள் பின்தொடர்பவர்கள் (பாலோவர்ஸ்) அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆபரேட்டர்கள் – செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு வகை வாரி யாக பணம் செலுத்துதல் அதிகபட்ச கட்டண வரம்பு முறையே மாதம் ரூ.5.லட்சம், ரூ.4. லட்சம், ரூ.3. லட்சம் மற்றும் ரூ.2. லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல யுடியூப்-இல் காட்சிப் பதிவு,– குறும் படங்கள் – பாட்கா ஸ்ட் கட்டணம் செலுத்துவதற்கான வகை வாரியான அதிகபட்ச கட்டண வரம்பு முறையே மாதத்திற்கு ரூ.8 லட்சம், ரூ 7 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ. 4 லட்சம் என நிர்ணயிக் கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மற்றும் வெளி நாடுகளில் வசிப்பவர்களும் இத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
வக்பு வாரிய மசோதா
பொது மக்களிடம் கருத்துக் கேட்பு
புதுடில்லி, ஆக.31 வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக அனைத்து தரப்பினரும் தங்களது ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்கலாம் என வக்பு வாரிய சட்ட திருத்த மசோதவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
வக்பு வாரிய சொத்துக்களை இணையதளம் மூலமாக பதிவுசெய்து சீர்திருத்தம் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டது. இதற்காக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் கடந்த 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மத்திய வக்பு கவுன்சில் அமைக்கப்படும் எனவும், மாநில வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் மதத்தை சேராத பிரதிநிதிகள் இடம் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒரு சொத்தை வக்பு வாரிய நிலமா அல்லது அரசு நிலமா என்பதை மாவட்ட ஆட்சியர் தீர்மானிப்பார் எனவும் சட்டதிருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்தன.
இது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும், அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து இந்தசட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் ஏற்ெகனவே நடந்து முடிந்த நிலையில், இரண்டாவது கூட்டம் டில்லியில் நேற்று (30.8.2024) நடந்தது. இதில் மும்பையைச் சேர்ந்த அகில இந்திய சன்னி ஜமியதுல் உலாமா அமைப்பு, டில்லியில் உள்ள சிவில் உரிமைகளுக்கான இந்திய முஸ்லிம்கள் (அய்சிஎம்ஆர்) அமைப்பு ஆகியவை தங்களது கருத்துக்களை தெரிவித்தன.
இந்நிலையில் மக்களவை செயலாளர் நேற்று (30.8.2024) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள், அமைப்புகள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால்தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் தங்களது கருத்துக்களை இந்தக் குழுவிடம் 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யலாம். எழுத்துபூர்வமாக கருத்துக்களை தாக்கல் செய்வதுடன், குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விரும்புவோரும், தங்கள் விருப்பத்தை கடிதம் மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.