சென்னை, ஆக.30 சென்னை நகரில் பாதுகாப்புக்காக 3 அம்ச திட்டத்தை, அதிகாரிகள் கூட்டத் தில் காவல் ஆணையர் அருண் அறிவித்துள்ளார்.
சென்னை நகர பாதுகாப்பு ரெட், யெல்லோ, ஆரஞ்சு என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதச் செயல்களோ, தீவிரவாதிகள் போன்றவர்கள் குறித்த தகவல்களோ கிடைத்தவுடன், காவல்துறையினர் மைக்கில் நிகழ்வு குறித்து எந்த விவ ரத்தையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தெரிவிக்க மாட்டார்கள்.
வெறும் ரெட் சமிஞ்கை என்று நிகழ்வு இடம் குறித்த விபரத்தை மட்டுமே குறிப்பிடுவார்கள்.
உடனே தீவிரவாதிகள் தொடர் பான பிரச்சினை என்பதை உணர்ந்து, ஆணையர் முதல், அந்தப் பகுதியின் காவல் ஆய்வாளர் வரையிலான அதிகாரிகள் கண்டிப்பாக நிகழ்வு இடத்துக்கு சென்றாக வேண்டும். நிகழ்வு நடந்த நேரம் உடனடியாக தெரிவிக்கப்படும் என்பதால், நிகழ்வு பகுதியில் இருந்து சுமார் குறைந்தது 5 கி.மீ.தூரம் வரை உள்ள பகுதிகளின் எஸ்.அய்.,க்கள், காவல் ஆய்வாளர் முதல் துணை அல்லது இணை ஆணையர்கள் வரையிலான அதிகாரிகள் அவர்களது எல்லைக் குள் உள்ள முக்கியமான பகுதிகளுக்கு உடனடியாக துப்பாக்கியுடன் சென்று, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்திருக்க வேண்டும்.
தேவைக்கேற்ப வாகன சோதனை, தெருத்தெருவான ரோந்து, விடுதிகள், தங்குமிடங்கள் சோதனைகள் உள்பட அனைத்து வகையான நடவடிக்கைகளை மின்னல் வேகத்தில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆணை யரோ மற்ற அதிகாரிகளோ ெசான்னால்தான் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று நினைத்து இருந்து விடக்கூடாது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து எச்சரிக்கை சமிஞ்கை கொடுத்தவுடன் தங்களுக்கான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்து விடவேண்டும்.
அதேபோல, மஞ்சள் நிற சமிஞ்கை விடுக்கப்பட்டால், முக்கியமான நபர் அல்லது முக்கியமான பெரிய ரவுடி அல்லது முக்கிய பிரமுகர் கொலை அல்லது பெரிய அளவிலான கொள்ளை நடந்திருப்பதாக கருதி நிகழ்வு இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை உள்ள பகுதிகளுக்கு நிகழ்வு இடத்தில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள் தவிர மற்ற அதிகாரிகள் அனைவரும் வந்து, அந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். குறிப்பாக கூடுதல் ஆணையர் எல்லைக்குள் உள்ள அதிகாரிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
ஆரஞ்சு சமிஞ்கை விடுக்கப் பட்டால், சங்கிலி பறிப்பு, அலைபேசி பறிப்பு போன்ற சம்பவங்கள் நடப்பதாக அர்த்தம். கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒலி வாங்கியில் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சொல்லி ஆரஞ்சு சமிஞ்கை என்று கூறினால், நிகழ்வு நடந்த பகுதியில் இருந்து காவல் மாவட்ட எல்லை முழுவதும் உள்ள காவல் ஆய்வாளர்கள் உதவி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குள் உள்ள பகுதியை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரவேண் டும். அதற்கு ஏற்றாற்போல வாகனச் சோதனையில் ஈடுபட வேண்டும்.
ஒரு குற்றம் நடந்தால் சில நிமி டங்களிலோ, அல்லது குறிப்பிட்ட எல்லையை அவர்கள் தாண்டுவதற் குள்ளோ காவலர்கள் சுற்றிவளைத்து கைது செய்ய வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால், எவ்வளவு பெரிய குற்றங்களை செய்தாலும் தப்பிச் செல்ல முடியாது. அதேநேரத்தில் குற்றவாளிகள் ஆயுதங்கள் வைத்திருக்கலாம். அதற்கு தகுந்த வகையில் முன்னெச்சரிக்கையுடன் சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதோடு, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஒரு குற்றவாளி கூட தப்பிவிடாமல் பிடிக்க முடியும். இந்த 3 பாதுகாப்பு அம்சங்களையும் காவல்களும், காவல் அதிகாரிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த திட்டம் உடனடியாக அம லுக்கு வருவதாகவும் காவல்துறை ஆணையர் அருண் அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.