பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
வடசென்னை – தாணா தெருவில்…
புரசைவாக்கம், ஆக. 29- தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 51A(h) பிரிவு – விளக்கப் பரப்புரைக் கூட்டம் வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் சிறப்பாக நடபெற்றது.
23.8.2024 அன்று மாலை 6.30 மணிக்கு புரசைவாக்கம் தாணா தெருவில் எழுச்சியோடு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமை வகித்தார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில ப.க. துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாவட்ட காப்பாளர் கி.இராம லிங்கம் முன்னிலை வகித்தனர். அயன்புரம் பகுதி தலைவர் சு.துரைராசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தொடக்கவுரை ஆற்றினார்.
துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலிடப் பொறுப்பாளர் இரா.செல்வம் ஆகியோர் மக்களை முட்டாள்களாக்கும் பல்வேறு மூடநம்பிக்கை நிகழ்வுகளை விளக்கிப் பேசினர்.
கழகப் பிரச்சார
செயலாளர் சிறப்புரை
ம.தி.மு.க. – மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் வந்தியத் தேவன் உரையாற்றி முடித்த பிறகு நிறைவாக கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரையாற்றினார்.
நீண்ட வரலாறு உடைய சுய மரியாதை இயக்கத்தில் பாடுபட்ட மகளிர் பல அவமானங்களை, சமூகப் புறக்கணிப்புகளை எதிர் கொண்டு அவர்கள் ஆற்றிய பணிகளையும், செய்த தியாகங்களையும், சமூகத்தில் நிலவி வரும் பெண்ணடிமைத் தன்மைகளை விளக்கியும் வழக் குரைஞர் அருள்மொழி தமது சிறப்புரையில் குறிப்பிட்டு விளக்கமாக உரையாற்றினார்.
கலந்துகொண்ட தோழர்கள்
மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால், தி.செ.கணேசன், வழக்குரைஞர் துரை அருண், கோ.தங்கமணி, ப.கோபாலகிருஷ்ணன், க.துரை, வழக்குரைஞர் கு.வேலவன், பா.சிவகுமார், க.செல்லப்பன், ச.இராசேந்திரன், க.கலைமணி, நா.பார்த்திபன், தங்க.தனலட்சுமி, மு.பவானி, கோ.அன்புமணி, க.இளவழகன், ரெ.யுவராஜ், பா.பார்த்திபன், வ.ம.வேலவன், வே.சாரல் இன்பன் உள்ளிட்ட கழகத் தோழர்களும், பொது மக்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிறப்புரையாற்றிய வழக்குரை ஞர் அ.அருள்மொழி, ஆ.வந்தியத் தேவன் மற்றும் கழகப் பொறுப்பாளர்களுக்கு இயக்க வெளியீடுகள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் ‘தோட்டக் காரர்” கண்ணன் தந்தை பெரியார் மற்றும் திராவிட இனத் தலைவர்கள் பற்றி புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதைகளைச் சிறப்பாகக் கூறி உரையாற்றினார்.
தாணா தெருவில் கழகக் கொடி கள் கட்டப்பட்டு, கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. மாவட்ட அமைப் பாளர் சி.பாசுகர் நன்றி கூறினார்.
தர்மபுரி – பென்னாகரத்தில்…
பென்னாகரம், ஆக.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டை யொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 51-A(h) பிரிவு பற்றி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே 27.8.2024 அன்று மாலை 5 மணி அளவில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் பொதுக்குழு உறுப்பினர் அ.தீர்த்தகிரி தலைமை யில் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் க. அழகேசன் வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பீம. தமிழ் பிரபாகரன் இணைப்புரை வழங்கினர். பென்னாகரம் நகர தலைவர் இ. என். மாதையன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கே. ஆர். குமார், பகுத்தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் எம்.கோவிந்தராசு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர. கிருஷ்ணமூர்த்தி, கழக காப்பாளர் அ.தமிழ்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் தி.அன்பரசு, மாவட்டத் துணைத் தலைவர் இளையமாதன், தருமபுரி நகரத் தலைவர் கரு பாலன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
மாநில பகுத்தறிவாளக் கழக அமைப்பாளர் சி.என். அண்ணா துரை தொடக்க உரையாற்றினார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட கழக தலைவர் கு.சரவணன், ஆகியோர் கருத்துரையற்றினர்.
நிறைவாக சுயமரியாதை இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சி யும், மக்களிடையே பரவி கிடக்கும் மூடநம்பிக்கை குறித்தும் அதை ஒழிப்பதற்கான வழிமுறை குறித்தும், தந்தை பெரியார் காலத்திற்குப் பிறகுதான் பெண்ணுகளுக்கான பெருமளவில் கல்வி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது, அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பது குறித்து தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாரியப்பன், பகுத்தறிவாளர்களாக பொறுப் பாளர் தமிழ்மணி அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த. மு.யாழ் திலீபன், ஆசிரியர் சுந்தரம், வரகூர் சிவநாதன், நாகப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை-தக்கம்பட்டியில்…
திருவண்ணாமலை மாவட்டம் தக்கம்பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் 22.8.2024 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மு.க.இராம்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞர் அணித் தலைவர் க.சங்கர் தொடக்கவுரையாற்றினார். தோழர் எம்.சிவக்குமார் (சிபிஎம், மாவட்ட செயலாளர்), எம்.ஆறுமுகம் (சிபிஅய், மாவட்டச் செயலாளர்) மாவட்ட செயலாளர் ஏ.தமிழ்ச்செல்வன் (புரட்சிக்கர மாணவர் இளைஞர் முன்னணி) உரைக்கு பின் காப்பாளர் பி.பட்டாபிராம், கழகப் பேச்சாளர் யாழ் திலீபன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கா.கிருட்டிணன், கோ.தேவராசு, ஏ.ஏழுமலை, இரா.பிரேம்குமார், மாவட்ட தலைவர் பா.வெங்கட்ராமன், கொட்டையூர் இராஜேந்திரன் கலந்து கெண்டனர். பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் நா.கமலக்கண்ணன் நன்றி கூறினார்.
குடந்தை – திருப்பனந்தாளில்…
திருப்பனந்தாள், ஆக. 29- குடந்தை கழக மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றிய திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவு விளக்க தெருமுனைக் கூட்டம் 20.4.08-2024 அன்று திருப்பனந்தாளில் மாலை 6.00 மணிக்கு தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது.
கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.
திருப்பனந்தாள் ஒன்றிய செய லாளர் மோகன் தலைமையில் மாவட்ட தலைவர் நிம்மதி முன்னிலையில், குடந்தை மாநகர தலைவர் இரமேஷ், மாநகர செய லாளர் சிவகுமார், மாவட்ட மகளிரணி தலைவர் திருபுரசுந்தரி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் ஜில்ராஜ், துணை செயலாளர் சங்கர், திருப்பனந்தாள் ஒன்றிய இளைஞரணி தலைவர் கலைவாணன், நெடுந்திடல் அரிகிருஷ்ணன், சோழபுரம் மதியழகன், மணிக்குடி வீரமணி மற்றும் ஏராளமான தோழர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் திருப்பனந்தாள் ஒன்றிய துணை தலைவர் துகிலன் தமிழ்மணி வரவேற்றும் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரண்ராஜ் நன்றி கூறியும் உரை யாற்றினர்.
கம்பம் – கா.க.பட்டியில்
கா.க.பட்டி, ஆக. 29- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பொதுக்கூட்டம் கா.க.பட்டியில் 23.08.2024இல் நடைபெற்றது. கம்பம் மாவட்ட இளைஞரணி தலைவர் முத்தமிழன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் மாவட்ட செயலாளர் பி. செந்தில்குமார் கருப்பு சட்டை நடராசன் டி.பி.எஸ் சனார்த்தனன் முன்னிலை வகித்தனர்
கழக பேச்சாளர் அதிரடி அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர் சிவா.சிறப்புரை ஆற்றினார்கள். கம்பம் நகர தலைவர் முருகன் நன்றி கூறினார்.
தேனி மாவட்ட தலைவர் ம. சுருளி ராசு , டி.பி.எஸ் அரிகரன் அழகேசன் மகேந்திரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை-செங்குன்றத்தில்…
செங்குன்றம், ஆக.29- சுயமரியாதை இயக்க நூற்றாண்டை யொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் 51 A(h) பிரிவு விளக்கி பொதுக்கூட்டம் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் புழல் நகர கழக சார்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புழல் நகர தலைவர் புழல் சோமு தலைமை ஏற்று நடத்தினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜனாதிபதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பொன்னேரி நகர செயலாளர் மு. சுதாகர், மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப. சக்கரவர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன் தலைமை கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம் உரையாற்றிய பிறகு திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை ஆற்றினார்.
அவர்கள் தம் உரையில் மூடநம்பிக்கை மற்றும் பெண்ணு ரிமை பாதுகாப்பு பற்றி பல் வேறு தகவல்களை திறம்பட எடுத்துரைத்தார். குறிப்பாக கொல் கத்தாவில் பயிற்சி மாணவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பற்றி விரிவாக பேசினார் இறுதி யாக நன்றி உரையுடன் கூட்டம் முடிந்தது.
கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள்.புழல் நகர செயலாளர் வடகரை உதயகுமார், புழல் நகர தலைவர் செகத். விஜயகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியபாளையம் ஆகாஷ், க.ச.க இரணியன்,மாவட்ட செயலாளர் ஜெ. பாஸ்கர், பொதுக்குழு உறுப் பினர் விஜயகுமார், பொன்னேரி நகர தலைவர் வே.அருள், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் ஏலியம்பேடு முருகன், பொன்னேரி நகர இளைஞரணி செயலாளர் சுகன் ராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை அன்பு, அம்பத்தூர் பூ. ராமலிங்கம், அம்பத்தூர் முத்துகிருஷ்ணன், திமுக, விசிக, மதிமுக, தாய் தமிழர் இயக்கம்,சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.
ஈரோடு – நால்ரோடு பகுதியில்…
ஈரோடு, ஆக. 29- ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மு.நற்குணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மா.மணிமாறன் அனை வரையும் வரவேற்று பேசினார்.
ஈரோடு மாநகராட்சி 4-ஆம் மண்டல தலைவர் குறிஞ்சி என்.தண்டபாணி, இ.தே.காங்கிரசு கட்சி பொறுப்பாளர் ஜாபர் சாதிக், தி.க. பொதுக்குழு உறுப் பினர் கோ.பாலகிருட்டிணன், மாவட்ட துணைத் தலைவர் வீ.தேவராஜ், மாநகர தி.க.தலைவர் கோ.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் தொடங்கி வைத்து பேசினார்.
மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியை திண்டுக்கல் ஈட்டி மு.கணேசன் நடத்திக் காட்டினார்.
பிறகு பெரியார் பிஞ்சு அன் பெழில், பேராசிரியர் ப.காளிமுத்து ஆகியோர் உரையாற்றிய பின்னர் நிறைவாக கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்பு ரையாற்றினார்.
இந்த நிகழ்வில் ப.சத்தியமூர்த்தி, தாண்டாம் பாளையம் அன்பரசு, ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்ட கழகத் தோழர்களும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகர தி.க. செயலாளர் தே.காமராஜ் நன்றி கூறினார்.