பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கடந்த 6.8.2023 அன்று காலை 9 மணியளவில் மயிலாடுதுறை தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க கட்டடத்தில் 110 மாணவர்களுடன் தொடங்கியது. கழக மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையேற்று உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்து உரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார். கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி – “தந்தை பெரியார் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பில் முதல் வகுப்பை நடத்தினார்
மயிலாடுதுறையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
