பேராசிரியர்
எம்.எச்.ஜவாஹிருல்லா
விழுப்புரம், ஆக. 26- மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா நேற்று (25.8.2024) விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
வக்பு வாரிய திருத்தச் சட்டம் 2024அய், மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவை, தி.மு.க., உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஆரம்பத்திலேயே எதிர்த்தன.
ஒன்றிய ஆளும் பா.ஜ.க., கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும், இந்த மசோதாவுக்கு ஆட்சேபனை தெரிவித்தன. இந்த சட்டத் திருத்த மசோதா, சிறுபான்மை உரிமைகளை, மக்களின் வக்பு வாரிய சொத்துக்களை ஒன்றிய அரசு கபளீகரம் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், பா.ஜ.க., கூட்டணியில் உள்ள நிதீஷ்குமார் உள்ளிட்டோரும் எதிர்த்துள்ளனர்.
நாங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை சந்தித்து, இந்த மசோதாக்களின் தீமைகளை எடுத்துரைத்துள்ளோம். அவரும் எதிர்ப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.